பக்கம் எண் :

386துரை-மாலிறையன்

பொருள்களைப் பங்கிட்டுத் தந்தார்

முறைசீக்கு அமரில் கிடைத்த பொருள் முழுவதையும் முறையாக
மறைவே இன்றித் தோழர்க்கு மகம்மது அண்ணல் பங்கிட்டார்
சிறைப்பட் டவர்கள் பலரோடும் சிறப்புற் றவராம் ஒருமடந்தை
பொறையும் நிறையும் பொருந்தியவர் புகழ் “சூவைறா” எனஇருந்தார். 41

தாபிதுக்குச் சூவைறா கிடைத்தார்

அடிமை பலர்க்கும் கிடைத்ததுபோல் அப்பெண்கூட அடிமை எனக்
கொடுமை அறியாத் தாபிதுவும் கொடுக்கப் பெற்றார்; பெற்றவுடன்
கொடிமென் மேனி இடுபவளம் கொழு வெண்முத்து மணிவகைகள்
முடிபொற் குவைபோல் இருக்கும் அவர் முகம்மெய் கண்டு வியந்தனரே!42

உன்னைத் தொகை தந்து எவரும் மீட்கலாம்

பெண்ணே! உன்றன் பெருமையினைப் பிழையாய் உணரேன் அடிமைஎன
எண்ணேன் உன்னை; உனக்காக எவரே எனினும் தொகைதந்து
முன்னே மீட்டுச் செல்வரெனில் முழுதும் மகிழ்வேன்” என்றவுடன்
தண்ணார் முத்துப் பைங்கிளியும் தக்கோர் பெருமான் முன்சென்றே; 43

அண்ணலே தொகை தருக

அண்ணால்! என்னை ஆட்கொள்வீர் அடிமை யானேன் என்றாலும்
பெண்ணாள் என்மேல் மனமிரங்கிப் பெரியோர் தாபிது இது சொன்னார்:
“கண்ணால் நோக்கிக் கருத்திரங்கிக்கணக்காய்த் தொகைதந் தார்க்(கு) என்னை
முன்னால் அடிமை நிலை நீக்கி முறையாய் அனுப்பு வேன்” என்றார்; 44

திருப்பித் தந்து விடுவேன்

“தொகையைத் தந்தே எனைவிடுத்தால் தூயோய் நான்போய் உடன்தொகையை
வகையாய்த் திருப்பித் தந்திடுவேன் மாற்றார் மண்ணின் மணிஎனினும்
பகையாய் எண்ணிப் பாராதீர் பழிஇல் லாதேன்” எனக்கூறி
முகைமா மலர்முன் மலர்ந்தது போல் மொழிவாய் திறந்து முன்சொன்னார்;45