அபாசுபியான் பகைத்துக்
கொதித்தான்
இழுப்புறு “காந்தம்” முன்னே இருந்ததோர் இரும்பு போல
அழைப்பினை நோக்கி வாழ்ந்த அபாசுபி யானும், “நாமே
தொழத்தகும் பெருமை கொண்டான் தூயவன் குயையே” என்று
பழுத்ததீ வினை நெஞ்சத்துள் பாவத்தைப் பாய்ச்சிக்
கொண்டான். 18
கைசு மக்களைத் தூண்டினான்
இதனொடும் அமைந்தி ராத இழிகுயை அயிலான் சென்றான்
“முதற்பகை யான தீய முகம்மதை அழிக்க வேண்டும்
உதவிட வருக” என்றே உருக்கமாய்ப் பேசித் தூண்டிப்
பதமுறக் கைசு மக்கள் படைநடத் திடவே செய்தான். 19
பனீகுறைலா இனத்தாரையும்
தூண்டினான்
அண்ணலார் அன்பு நெஞ்சால்
அரும்பகை மாறி வாழும்
பண்ணலார் பனீகு றைலா பக்கமே சென்ற தீயன்
“உண்ணலா வாழ்க்கை? வீணில் உறங்கலா? மானம் காக்க
எண்ணலா? என்று நீவிர் எண்ணியே பார்த்த துண்டோ? 20
பழைய ஒப்பந்தத்தை
மறந்து விடுக
என்றைக்கோ உடன்படிக்கை
இயற்றிய காரணத்தால்
இன்றைக்கும் அடிமையாக இருந்திட விரும்பலாமா?
ஒன்றைக்கும் பிட்டுச் சொல்வேன் உடன்பிறந்த
வர்க்கே ஒப்பீர்
கொன்றேய்க்கும் மனத்தி னானைக் கொல்லவே
ஒன்று சேர்வோம்” 21
பனீகுறைலா மக்கள்
மனம் மாறினர்
என்றவன் நச்சு ரைகள்
இதயத்தில் பாய்ந்த தாலே
நின்றவர் பனீகுறைலா நெடுங்கிடை யாக வீழ்ந்தார்
இன்றுதான் உணர்வு பெற்றோம் என்றவர் உறுதி கூறி
ஒன்றி னோம் உம்மோ டென்றே ஒட்டினார்குயை
தன்னோடே; 22
கத்துபான், அசத்து, அவசு இனத்தாரையும்
தூண்டினான்
ஒத்துவந் தார்கள் என்றே உவகைமிக் கவனாய், மற்றும்
கத்துபான் கூட்டத் தார்கள் கருத்திலா அசத்து வீரர்
நத்திடும் அவசு இனத்தார் நால்வகை இனத்தாரையும்
மொத்தமாய் ஒன்று சேர்த்து முன்னர்ப்போல்
ஏய்த்து வென்றான். 23
|