அகழிகள் தோண்டப்பட்டன
நல்லது சொன்னார் என்றே நவின்ற நம் நபிவல்லாரும்
வல்லது காவலாயின் வந்தவர் சோர்ந்து போவார்
சொல்வது சரியே பள்ளம் தோண்டுதல் நலமே என்னும்
சொல்லது கேட்கும் முன்பே தோழர்கள் தோண்டி னாரே! 30
அவரவர் பங்குகளைத் தோண்டினர்
வெட்டிய பள்ளம் எங்கும் வேர்வையின் சேறு பொங்கும்
கொட்டிய மண்ணின் மேடு கோட்டைஉச் சியையும்மிஞ்சும்
ஒட்டிய வீரர் தங்கள் ஒதுக்கிய பங்கைத் தோண்டித்
தட்டிய கைகளோடு தகையர்முன் வந்து நின்றார். 31
முகம்மது பாறையைத்
தகர்த்தார்
இறைவனின் பெருமை பாடி எழில்முகம் மதுவும் தாங்கள்
முறையினில் பங்குக் கான முழுமையும் வெட்டும் போது
நிறைவலிப் பாறை ஒன்று நிலத்தினை மறைக்கத் கண்டே
இறைவனின் அருளினாலே எளிமையாய்த் தகர்த்து வென்றார். 32
பசி வருத்தியும் களைத்து
விடவில்லை
பணியிடைப் பசித்த போதும் பணிவிடுத்து அமைந்திடாமல்
துணிவுடன் தோண்டித் தோண்டித் தோள்களைப் படைந்தும் வீரர்
பிணிஎனும் பசியைப் போக்கப் பெருவயிறதனில் கற்கள்
திணிவுற வைத்துக் கட்டித் தெறுபசி போக்கிக்
கொண்டார். 33
சாபிர் என்பவர் விருந்து
வைத்தார்
பசியினால் வாடும் போதும் பதறிமெய் களைத்த போதும்
அசைவிலா துழைத்த அண்ணல் அன்பொடு கலந்த தோழர்
இசைவுடன் அகழி தோண்டும் எழிற்பணி கண்டார் சாபிர்
வசையிலார் அன்னார்தங்கள் வயிற்றுத்தீப் பசியைப் போக்க; 34
ஆடு வெட்டப்பட்டு,
மாப்பிசையப்பட்டது
எண்ணினார் ஆடு வெட்டி இயல்பொடும் மாப்பிசைந்து
புண்ணியர் எல்லாருக்கும் புகழ்விருந் தளிக்கு மாறு
தண்ணியல் நெஞ்சம் கொண்ட தலைவியார் தம்பால் கூற
வண்ணமா மயிலார்தாமும் மகிழ்ந்துடன் வினைமேற்
கொண்டார்; 35
|