எங்கும் இருள் சூழ்ந்தது
விண்ணெது தரைஎஃதென்று விளங்கிட வில்லை
மக்கள்
கண்ணதில் ஒளியே இன்றிக் கலங்கினர் வீரர்
பட்ட
புண்ணது கொண்ட நோயும் பொய்யென நினைக்கும்
வண்ணம்
தண்ணிருள் எங்கும்சூழத் தவித்தனர் ஆங்குற்றாரே! 66
பகைவர் கதறினார்கள்
சிதறினார் பகைவர் கண்முன்
திசையெலாம் தெரியா தானார்
பதறினார் பக்கம் ஓடிப் பற்றினார் மரத்தை
எல்லாம்
உதறினார் கைகால் உற்ற உதவிகள் இல்லை என்றே
கதறினார் பல்லோர் அந்தக் காரிருள் தனில்கலந்தே! 67
எல்லாம் அல்லாவின்
அருட்கொடையே
அல்லாவின் அருட்கொடைகள் அரும்புவி காத்தல் போல
நல்லார்கள் செய்த போரில் நன்றிஇல்லாரைத் தாக்கிப்
பல்லாரும் வியக்கு மாறு பகர்நல வெற்றி தந்தான்
வல்லான்விண் இறைவன் மண்ணில் வான்புகழ் நிலைப்
பதற்கே! 68
அகழ்ப்போர் முடிவுற்றது
அரும்புகழ்த் தீன்நல் லாரை அழித்திடும் எண்ணங் கொண்ட
பெரும்பழிக் குறைசியர்கள் பிழைஇனிப் புரியா வண்ணம்
தரும்புகழ் கொண்ட தான தகும்நல்ல அகழிப் போரைப்
புரிந்தபின் அமைதி யானார் புகழ்நெறி தழைத்தோங்கிற்றே! 69
***
|