பக்கம் எண் :

40துரை-மாலிறையன்

ஒருநாள் நசுறானியர் வந்தனர்

அருஞ்சேயின் மாட்சிஎண்ணி அச்சிற்றூர்

மக்களெலாம் அருகில் வந்தே

“மருந்தாகி நம் வாழ்வை மலர்விக்க

வந்தமுகம் மதுவே” என்று

பொருந்துவன வாம்உரைகள் புகன்றவராய்

வாழுகின்ற பொழுதில் ஓர்நாள்

விருந்தினர்போல் நசுறானி இனத்தவர்கள்

சிலபேர்கள் விழைந்து வந்தார். 28

“இக்குழந்தையை எங்களுக்குக் கொடுங்கள்” என்றார்

ஒளிநபியார் முகம்கண்டும் ஒப்பில்லா

உருக்கண்டும் உவகை காட்டி

வெளிமனத்தால் விரும்புகிறார் போல் பேசி

உள்ளுக்குள் வெறுப்புக் காட்டி

“எளிதான இச்சேயை எமக்கீந்து

சிறப்புறுக” என்று சொன்னார்

அலிமாவோ அவர்சொல்லைக் கேட்டவுடன்

அகம்முழுக்க அதிர்ச்சி கொண்டார். 29

இனி இவர்களிடமிருந்து

குழந்தையைக் காப்பது நம் கடமை

“நாம் உற்ற புண்ணியத்தை நறுக்கென்று

கேட்கின்றார் நாக்கூசாமல்

தாம் உற்ற உணர்வதனால் தனிச்சிறப்புக்

குழவியெனப் புரிந்து கொண்டார்

காம் உற்றுக் குழவியினைக் கடத்திடவும்

செய்திடலாம் கருத்துக் குள்ளர்

மாமணியாம் முகம்மதுவைக் காத்திடுதல்

மாறாநம் கடமை” என்றே; 30