கள்ளின் கொடுமை மிகவும்
பெரிதே
நஞ்செனும் கள்ளுண் பான்கை நடுங்கிடும் கண்ணிரண்டும்
பஞ்சடைந் திருளும் மெய்யும் பதைத்திடும் மடி உறக்கம்
தஞ்சமென் றடைந்து வைகும் தளர்ச்சியை உண்டு பண்ணும்
கொஞ்சமென் றில்லை கள்ளின் கொடுமையோ பெரிதே
அம்மா! 30
திருந்த வந்தாரையும்
வெறுக்கச் செய்யும்
கருத்தினை மயக்கும்
கொண்ட கடமையை மறக்கச் செய்யும்
பொருத்தமில் லாத வற்றைப் பொருத்தமென் றிசைய வைக்கும்
தெருத்தனில் திரிய வைத்துத் தேயத்தை அழிவில் உய்க்கும்
திருத்துவாரையும் கைப்பாக்கும் தீயதக் கள்ளின்
பண்பே! 31
கள்ளே நிலை தடுமாறச்
செய்யும்
கொலை கொள்ளை களவென் கின்ற குற்றங்கள் பெருக்கி நாட்டை
நிலைதடு மாறச் செய்து நிறைமன நீதி மாய்க்கும்
அலைபடு துரும்பே போல ஆருயிர் கூட்டம் தன்னைக்
குலைந்திட வழி வகுக்கும் கொடியது கள்ளே யாகும். 32
களியன் சுற்றத்தையும்
இழந்து சாவான்
இத்துணைக் கொடிய தான இழிதகைக் கள்ளை உண்பான்
சொத்தினை இழப்பான் உற்ற சுரணையை இழப்பான் கற்று
வைத்ததன் அறிவி ழப்பான் மானமும் இழப்பான் தன்னை
மொய்த்தசுற் றத்தைக் கூட முழுவதும் இழந்து சாவான்; 33
மாந்தன் வலிமை இல்லாதவன்
வலிமை இல்லாத மாந்தன் வகைபெற வாழ்வதற்காம்
நலமான வழிமுறைகள் நல்குவோன் இறைவன் அல்லா
பொலிவுள்ள உடலைத்தீமை பொருந்திய கள்ளி னாலே
நலிவுள்ள தாக்கல் அல்லா நவின்றதைப் பழிப்ப
தாகும். 34
அல்லாவின் உரை
கள்ளினால் தீமை என்னும் கருத்தினை உரைத்துப் பின்னர்க்
கள்ளினை உண்டவர்கள் கடவுளைத் தொழாதீர் என்று
சொல்லின பின்னர்க் கள்ளைத் தூயவர் முசுலிம் மாந்தர்
உள்ளலும் தீதே என்றீங்(கு) உரைத்தனன் அல்லா
தானே. 35
|