நாங்கள் ஒன்றாக வேண்டும்
நற்ற வத்துப் பெருமானே! நாங்கள் முன்போல் ஒன்றாகி
மற்ற மக்கள் போற்றுகிற வகையில் வைக்க வேண்டுமெனப்
பற்றால் பெண்ணாள் கூறியதும் பாவம் போக்கும் பெருமானார்,
நற்றாள் வணங்கி கேட்டவளின் நலிவை உணர்ந்து பின்சொன்னார்; 54
பிரிந்தவர் சேர வாய்ப்பு
இல்லையே
விரும்பா வகையில் மணவிலக்கு விரும்பிப் பிரிந்தீர் ஆகையினால்
திரும்ப ஒன்று பட்டுலகில் திகழ வாய்ப்பும் ஈங்கிலையே
கரும்பே அன்ன வாழ்வுதனைக் கசப்பாய்க் கொண்டீர் எனக்கூறிப்
பெரும்பேறுற்ற நபிக் கோமான் பேசி இருக்கும்
வேளையிலே; 55
மனைவியைச் சினந்து தாயே
என்றழைத்தால் தண்டனை
ஒளிரத் தோன்றிச் செபுறயீல் ஆங்(கு)ஒளியோன் உரையைத் தெரிவித்தார்
தெளியாச் சினத்தால் ஒருகணவன் திகழ்மா மனையைத் தாயென்று
விளியா நின்றான் ஆமாகில் விளைத்தான் “பாவம்” என்பது மெய்;
அளியான் அதற்குக் கழுவாயாய் அடைய வேண்டும்
தண்டனையே! 56
பாவத்திற்குக் கழுவாய்
அடிமை தன்னை விடுவித்தால் ஆகும் நன்மை இலையாயின்
படிந்தே அறுப துயர் நாள்கள் பற்றாய் நோன்பு செய வேண்டும்
முடிய வில்லை நோன்பென்றால் முன்வந்து அறுபது
இரவலர்க்கும்
படிஒன் றாகத் தானியங்கள் பரிவுகொண்டு தரவேண்டும். 57
பெண்ணே! பாவம் தீர இது
செய்
கழுவாய் இதனைச் செய்தால்தான் கலங்கிப் பிரிந்த அவள்கணவன்
வழுவில்லாமல் மனைவியொடு வாழ இயலும் வழியுண்டாம்
பழுதும் நீங்கும் எனஉரையே பகர்ந்து சென்றார் செபுறயீலே
அழுது சொன்ன பெண்ணவள்பால் அண்ணல் நபியார் இது சொன்னார்; 58
ஐயனே என்னிடத்தில் ஒன்றும்
இல்லையே
“பெண்ணே! மூன்றில் ஒன்றேசெய் பின்புன் துணையோ டொன்றிடச்சேர்
இன்னே” என்றார் அப்பெண்ணோ எதுவும் இல்லை என்னிடத்தில்
என்னே செய்வேன் எனச்சொல்ல இனியார் ஈத்தம் பழக் குலையைத்
தன்னே ரில்லாத் தகைமையினால் தந்து பின்னால் சொன்னாரே! 59
|