|
தோழர்கள் உள்ளம்
வருந்தினர்
அமைதி நிலவ வேண்டுமெனும்
அடங்கா ஆர்வ மிகுதியினால்
அமையாச் சுகையில் கருத்தை எலாம் அகம்மது ஏற்றுக் கொண்டார்கள்
தமையே இகழும் வகையில் இந்தக் தகுதிஇல்லா
உடன்படிக்கை
அமைந்து விட்ட தெனக் கூறி அண்ணல் தோழர்
வருந்தினரே! 72
அபூசந்தல் முசுலிம் ஆயினான்
உடன்படிக்கை எழுதிக் கை ஒப்பம் வைக்கும் முற்பொழுதில்
அடம்பிடித்த சுகையில்தன் அரிய புதல்வர் அபூசந்தல்
உடன்பட் டிசுலாம் நெறிநாடி உயர்ந்தார் என்னும் செய்தியினைக்
கடமை மறவாத் தூதுவர்கள் கடுகி வந்து தெரிவித்தார். 73
அபூசந்தலை கட்டிப்
போட்டு வதைத்தனர்
“கொள்கை மாறி நடக்கின்ற குற்றம் செய்தான் அபூசந்தல்
கள்ளன்” என்று குறைசியர்கள் கட்டிப் போட்டுத் துயர்செய்தார்
உள்ளத் துள்ள உயர்வள்ளல் ஒளிமா நபியார் அருளதனால்
எள்ளத் தனையும் இடர்இன்றி எளியோர் தப்பித்
துடன் வந்தார்; 74
அபூசந்தலை ஒப்படைக்க
மறுத்தார்
தப்பி வந்த அபூசந்தல்
தந்தை சுகைகலும் அதுகண்டே
ஒப்பி உள்ளீர் அதனாலே ஒப்ப டைப்பீர் என்மகனை
இப்போ தீங்கே எனச் சொல்ல இசுலாம் கோமான், “இன்னும் கை
ஒப்பம் இடவே இலை அதனால் ஒப்ப மாட்டேன்” எனச் சொன்னார். 75
உடன்படிக்கை நல்ல முறையில்
நடக்கட்டும்
ஒப்பா விட்டால் உடன்படிக்கைக்(கு)
ஒப்பேன் என்றான் அச்சுகையில்
செப்பிச் செய்த உடன்படிக்கை செல்லா விட்டால்
நலமில்லை
தப்போ சரியோ எதுவெனிலும் தடையே இன்றி நடைபெறட்டும்
இப்போ திவர்தம் தந்தையிடம் இவரை ஒப்ப டைத்திடுவோம்; 76
பயண நோக்கத்தை நிறைவேற்றினான்
எழுபது ஒட்டகங்கள்
அறுத்தார்
என்றே எண்ணிச் செயல்பட்டார் எனினும் ஏந்தல் மனம் நொந்தார்
நன்றே கொண்டு சென்றிருந்த நாற்ப தினைந்தோ டொருபத்தாய்
நின்ற ஒட்டகம் தம்மை நினைத்த படியே அறுத்தாக்கி
அன்றே தலையின் முடிமழித்தே அரிய மதீனா நகர்விரைந்தார். 77
|