சல்மாவே! புல் மேய்த்து வா
சல்மா என்னும் தோழர்தமைத்
தகுமா முகம்மது அண்ணல்பிரான்
நல்வான் நாடும் வல்லவ! நீ நம்கால்நடைகள் தமை ஓட்டிப்
புல்வளர்ந்த காபாவில் பொறுமை யோடு மேய்த்திடவே
செல்வாய்” என்றார்; செம்மலுரை செவியால் கேட்ட
சல்மாவும்; 78
சல்மா பகைவரை வென்றார்
உடன்கால் நடைகள் இடம்பெயர ஓட்டிச் சென்றார் இடையனொடும்
அடர்வெம் பகைவர் அதுகேட்டே ஆங்கண் வந்து தடைசெய்து
தொடர்போர் செய்தார் சல்மாவோ தொகுபோர் செய்ய வந்தவரை
பிடர்வெஞ் சினத்தின் அரிமாபோல் பெரும்போர்
செய்து வென்றாரே! 79
சல்மா, அபூகுதா இவர்களை
எவராலும்
வெல்ல இயலாது
வீரர் சல்மா வினைகண்டு
வெற்றி வேந்தர் முகம்மதுவும்
ஆரத் தழுவி அவர்தமக்கே அன்பைக் காட்டி மகிழ்வித்துக்
காரத் தொடுபோர் செய்வதிலே காளை சல்மா அபூகுதாதம்
ஓரத் தினிலே வரஈங்கே ஒருவர் கூட இலை என்றார். 80
பல்லோர் இறைவன் நெறியைத்
தழுவினார்கள்
ஒப்பில் லாத உடன்படிக்கை
உதைபிய் யாவில் ஆனதனால்
தப்பில் லாத மாந்தரெனத் தக்க நபியார் தமை எண்ணி
அப்பால் இருந்த அருந்தலைவர் அரியோர் எல்லாம் மனம்மாறி
இப்பால் வந்து சேர்ந்தார்கள் இறைவன் அருளின்
மாண்பாலே! 81
மேலும் மேலும் தீன்நெறி
செழித்தது
பகையே விளைத்த காலிதுவும் பழியே புகன்ற அம்றுவொடும்
தகைமை மிக்க உக்கையிலும் தக்கார் உதுமான் என்பாரும்
நகைவாய் மலரக் கலிமாவை நலமாய் ஓதித் தீனவர்தம்
தொகையுள் கலந்தார் முகம்மதுவும் தொடர்ந்து கடவுள் புகழ்
நயந்தார்; 82
குறைசியர் சிலர் பொறாமை
கொண்டனர்
மக்கா நகரின் குறைசியர்கள் மனமாற் றந்தான் உருவாகி
மிக்கார் போற்றும் இறைநெறியைச் மேவிப் புணர்ந்தார் பெரும்பாலோர்
அக்கால் மற்றக் குறைசியர்கள் அழியும் எண்ணம் கொண்டவராய்ப்
புக்கார் மதீனா நகர் என்றே பொறாமை கொண்டு
வெகுண்டாரே! 83
|