உறனியர் கூட்டத்தார்
இணைந்தனர் கலிமா ஒதினர்
எட்டுத் திசையும் விண்ணிறைவன்
இனிய உரையின் நெறிபரவக்
கட்டுப் பட்ட பெருமக்கள் கலிமா ஓதிச் சிறந்தார்கள்
ஒட்டி வந்த உறனியராம் ஒருகூட்டத்தைச் சேர்ந்தவர்கள்
எட்டுப் பேர்கள் முன்வந்தே இசுலாம் நெறியில்
இணைந்தார்கள். 84
மனத்தினுள் வஞ்சம் வைத்தனர்
மனத்துள் வஞ்சம் வைத்தவர்கள்
மகம்மதுமுன்னே நல்லவர்தம்
இனத்துள் ளார்போல் நடித்தாலும் இசுலாம் நெறியை இகழ்ந்தார்கள்
நினைத்தால் கூட அஞ்சுகிற நிலையில் தீமை விதைத்தார்கள்
அனைத்தும் தீய வினையாக அவர்கள் செய்து கறுத்தார்கள்; 85
தொழுநோயால் தாக்கப்பட்டனர்
செய்தீ வினையின் பழியாலே சிறியார் கொடிய நோய்பெற்றார்
பொய்தேர் வினையால் அன்னவரின் பொலிந்த மெய்மேல் தொழுநோயும்
கைம்மேல் வரவே உற்றதனால் கலக்கம் கொண்டு
முகம்மதுவின்
மொய்சேர் பாதத் துணைபற்றி மொய்த்துக் கதறித்
துடித்தார்கள். 86
ஒட்டகப் பாலும் சிறுநீரும்
குடித்தார்கள்
“வெம்மை மனத்தின் விளைவாலே வெந்து நோயால் குலைகின்றீர்
செம்மை நெறியை நாடுங்கள் செழிப்பீர்” என்று கூறியவர்
நம்மைச் சுமக்கும் ஒட்டகத்தின் நற்பா லோடும் சிறுநீரால்
உம்மைப் பற்றி உளநோயும் உடனே மாயும் குடிக்கென்றார்; 87
திருந்தாதவர் திருடினர்
இரண்டும் கலந்து குடித்தவர்கள்
இழிநோய் நீங்கப் பெற்றாலும்
இருண்டி ருந்த அவர்தங்கள் இதயம் ஒளியைப் பெறவில்லை
திரண்டு சென்றுஓர் இடம் இருந்த தீன்நல் லாரின்
ஆடுகளைத்
திருடிக் கொண்டு சென்றதனைச் செம்மல் நபியார்
அறிந்துடனே; 88
திருடியவர்களைப் பிடித்து வருக
கொடிய திருட்டைச் செய்தவரைக் கூடிச் சென்று பிடித்துவர
அடியார் தம்மை அனுப்பி வைத்தார்; அவரும் அந்தக் கள்ளர்களைப்
பிடியாய்ப் பிடித்துப் பெருமான்முன் பேசாக் கல்போல் நிறுத்திவைத்துப்
“படியா இந்தக் கள்ளர்க்குப் பகர்க தண்டம்”
எனக் கேட்டார். 89
|