3. அபாசுபியான் தூது சென்ற
படலம்
மன்னர்களுக்கு விடுத்த
மடல்
அல்லாவின் பெயரால்
அனுப்புகிறேன்
அளவிலா அருளும் நல்ல அன்பெலாம் கொண்ட விண்ணோன்
வளமான பெயரி னாலே வரைகின்ற மடலேஎன்று
களமெலாம் சென்று வெற்றி கண்டவர் நபிக்கோமானும்
உளவைய மன்னர்க் கெல்லாம் ஊக்கமாய் மடல்விடுத்தார்; 1
இறைவன் அருள் பெறுக
“அல்லாவின் தூதரான அகம்மது விடுக்கும் ஓலை
பல்லாரும் இறைவன் பேரைப் பணிகின்றார் பெருமை கொண்டார்
வல்லாரே தாங்கள் கூட வசையிலா முசுலீம்ஆகி
நல்லாராய்த் திகழ்ந்து விண்ணின் நல்வாழ்வு பெறுக”
என்றே; 2
நாற்றிசைக்கும் அனுப்பினார்
பல்வகை நாட்டைச் சேர்ந்த
படர்புகழ் மன்னர்க் கெல்லாம்
நல்வகை மடலைத் தீட்டி நால்வகைத் திசைக்கும் போக்கிச்
சொல்வகை யான நல்ல சுடர்கருத் தினையும் காட்டி
வெல்வகை யாக நின்றார் விழைமதி னாவின் வேந்தர். 3
உரோம் மன்னர் கெய்சர்
பெற்றார்
வெற்றியில் திளைத்த
வேந்தர் விழையும்பே ரரசே யான
நற்றிறம் வாய்ந்த ரோம நாட்டினர் கெய்சர் என்பார்
பெற்றனர் மடலை; அந்தப் பெருமடல் படித்த பின்னர்
உற்றநல் அரபு நாட்டுக்(கு) உரியாரை அழைக்கச் சொன்னார்; 4
அரபுநாட்டு வணிகர்களே
கூறுங்கள்
வணிகர்கள் பலர்முன்
வந்து மன்னரே! அரபு நாட்டின்
வணிகர்யாம் என்று நின்றார் மன்னரும் அவரை நோக்கி
“வணிகரே உமது நாட்டில் வந்துளார் நபிக ளாமே
இனியவர் அவர்க்கு ஆரேனும் இசைந்தவர் உறவோர்
உண்டா? 5
|