அபாசுபியான் எழுந்து சொன்னான்
மன்னவர் இதனைக் கேட்க
வந்தவர் வணிக மக்கள்
அன்னவர் முன்னே நின்ற அபாசுபி யானும் நேர்ந்து
மன்னரே! யானே உள்ளேன் மகம்மதுக்கு உறவும் ஆவேன்
என்னநும் செய்தி?” என்றே “இயம்புக” என்று சொன்னான். 6
முகம்மது குடியில் நபிகள்
வந்ததுண்டா?
தம்மையே நபிஎன் கின்ற தக்கவர் குடும்பம் கூடச்
செம்மையா னதுவா? என்றார் செப்பிய விடையோன் தானும்
“இம்”மென “ஆம் ஆம்” என்றான் இதற்குமுன் நபியோ வேந்தோ
அம்மாந்தர் குடியில் உண்டா? அறைகுவாய்” என்று
கேட்டார். 7
ஏழைகளும் அடிமைப் பெண்களும்
போற்றுவார்
இல்லைஎன் றானை நோக்கி “இத்தகையோரைப் போற்றல்
எல்லைஇல் லாததுன்ப ஏழையா செல்வர் தாமா?
சொல்லுக விடையை” என்றார் சொல்லுவோன், “அடிமைப்பெண்கள்
அல்லல்சூழ் ஏழை மக்கள் அவர்தமைப் பணிவோர்”
என்றான்; 8
நன்னெறியா? தீயநெறியா?
“அவர்செலும் நெறிஎந் நாளும் ஆவதா? அழிவ தா? சொல்
தவறாகப் பொய்யு ரைகள் தருவதும் உண்டா? கூறு
நவில்வதை மாற்றிப் பேசும் நம்பிக்கை யற்ற பேரா?
நவில்” எனக் கேட்டார் மன்னர் நாடியோன் “நல்லோர்”
என்றான். 9
அவரொடு பொருது வென்றதுண்டா?
அவரொடும் பொருத துண்டா? அறைகுவிர் என்று கேட்டார்
“தவறின்றி வெற்றி தோல்வி தாம்கண்ட துண்டே” என்றான்
“நவின்றிடும் கொள்கை தன்னை நவிலுக” என்று கேட்டார்.
அவனும்ஆங் கரசர் கேட்க அரும்புகழ் எடுத்துச் சொன்னான்; 10
அவர், கொள்கை பற்றிக்
கூறினான்
“இறையவன் ஒருவன் என்பார்; இணைஇல்லை அவனுக்கென்பார்
நிறைவான வனையே எண்ணி நெடுந்தூய வாழ்க்கை வாழ்க;
முறையாக உண்மை பேசி முப்போதும் ஒன்றி வாழ்க
மறையினை போற்றி” என்பார் மன்னா! என்றவனே சொன்னான் 11
|