பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்43


முகம்மது பேரைக் கேட்டவுடன் சிலைகள் கவிழ்ந்தன

எனச்சொல்லி முதியோரும் அலிமாவை

எழில்கோவில் அழைத்துப் போக

மனக்குறையை அன்னையவர் முறையிட்டு

முகம்மதுவின் மாண்பேர் சொல்ல

வணக்கமுற அப்பேரைக் கேட்டவுடன்

வரமீயா உருவத் தெய்வம்

இணக்கமுறக் கீழ்விழுந்து முணுமுணுத்தே

இறைத்தன்மை இழந்த தாலோ; 37

இனி உங்கள் தெய்வத்திடம் முறையிடுங்கள்

நரைமுதியோர் அலிமாவை நோக்கி, “அம்மா!

நான் வணங்கும் நல்ல தெய்வம்

தரைமீதில் விழுந்ததனை நேர்கண்டாய்

தனிப்புதல்வர் தாம் வணங்கும்

இறைவேறு தானுண்டாம் என்பதனை

அறிந்து கொண்டோம் இனிஅத் தெய்வம்

மறைபுகழும் நற்றெய்வம் என்பதாகும்

அதைஉடனே வணங்கு” கென்றார். 38

பிள்ளையைக் காணாமல் தாயும்

அப்துல் முத்தலிப்பும் கலங்குதல்

அழுதுவரும் அலிமாவும் ஆரிதுவும்

அப்துல்லா முத்தலிப்பைத்

தொழுதபடி உரைத்திடவும் ஆமினாவின்

தொடர்மனம்தான் துயரம் மிக்கு

மெழுகெனவே உருகிடவும் உணர்வழுங்கி

வினைமறந்து வேரும் அற்று

விழுதறுந்து விழுகின்ற ஆல்மரம் போல்

விழுந்தனரே வெறுமை யாலே! 39