|
அதோ! வாழை மரத்தின் கீழ் உள்ளார்
அனைவருமே வருந்திமனம் மயங்கி
அழும்
அக்காலை ஆங்கோர் ஓசை
தனைக் கேட்டார்
அப்துல்லா முத்தலிப்பு
“தகைமைபெறும் தலைமை யோரே!
பனையளவு புகழ்கொண்ட
முகம்மதுவை
ககுபதுல்லா பக்கம்
உள்ள
பனிஓடை அருகினிலே வாழை
நிழல்
பக்கத்தில் பார்க்க லாகும்”. 40
அப்துல்லா முத்தலிப்புக்
குழந்தையைக் கண்டு மகிழ்தல்
“உடன்போக” எனக் கூறி ஒளிமறைய
நல்லுணர்வும் ஊக்கம்
தானும்
அடர்ந்தவரைத் தள்ளிவிட
முகம்மதுவின்
அன்பிழுக்க ஆங்கே
சென்று
தடவானில் வெண்மதியைப்
போலிருந்த
தனித்தலைமைப்
புதல்வர் தம்மை
அடங்காத ஆர்வத்தால்
கண்டணைத்தார்
அப்துல்லா முத்தலிப்பே! 41
இபுலீசு மட்டும் கலங்கினான்
மறைந்த நபி வந்தவுடன் மற்றவரும்
உற்றவரும் மகிழ்ச்சி
கொண்டார்
நிறைந்தபெரு மனைமாட்சி
ஆமினாவும்
நேர்மையுள அலிமா
தாயும்
உறைந்த மணிமக்காவில்
எக்குறையும்
உளவாகாது உவகை
கொண்டார்
குறைந்தவலி
உடையவனாம் இபுலீசு
மட்டும்தான் கலங்கி னானே! 42
|