எகுபது நாட்டு மன்னனுக்கும் ஓலை
எகுபது நாட்டை ஆண்ட ஏந்தல்மு
கௌகிசு என்பார்
முகம்மது விடுத்த ஓலை முழுவதும் படித்துப் பார்த்தே
அகமது மகிழ்ந்து தந்த அரியதாம் அதனைத் தன்பொன்
நகைமிகு பெட்டிக் குள்ளே நலமுற வைத்துக் காத்தார். 24
முகௌகிசு மன்னன் பரிசுகள்
அனுப்பினான்
அல்லாவின் தூத ரான அண்ணலார் பெருமை எண்ணிப்
பல்லாரும் வியந்து காணும் படிபெண்கள் இரண்டு பேரும்
வல்லார்கள் அணிவ தான வகையினில் ஆடை தாமும்
கொல்லவே மனம்வாரா வெண் கோவேறு கழுதை ஒன்றும்; 25
முகம்மது மகிழ்ந்து பெற்றுக்கொண்டார்
பொற்காசு நூறு கொண்ட புகழ் முடிச்
சொன்றும் சேர்த்து
நற்காதல் உள்ளம் கொண்ட நன்மருத்துவரும் அவ்விண்
சொற்காதல் கொண்ட செம்மல் தூயோர்க்கு அனுப்பி
வைக்க
முற்கொண்ட அன்பளிப்பை முகம்மது பெற்று வந்தார்; 26
மரியா கிப்தியாவை
மணந்து கொண்டார்
கோவேறு கழுதை தன்னைக் கொண்டவர் வைத்துக் கொண்டு
பூவேறு முகம்வே றென்று புகன்றிட இயலா நங்கை
மாவடு வன்ன கண்கொள் மரியாகிப் தியாஎன் பாரை
நாவேறு சொல்வே றாகா நபியாரே மணந்து கொண்டார்; 27
மற்றொரு பெண்ணைக்
கவிஞர்க்குத் தந்தார்
செப்பெனும் உருவப் பெண்ணாள் சிரீன்எனும் நங்கை யார்க்கே
ஒப்பெனும் கவிஞர் அச்சான் இப்னு தாபித்து தாமே
அப்பெண்ணைப் பெற்றுக் கொண்டார் அகம்மது முயற்சியாலே
தப்பிலாப் பாரின் மக்கள் தகுநெறி போற்றி னாரே! 28
|