|
சுறாக்கத்து முசுலீம்
ஆனார்
இறைவா! இறைவா! தாயிபுவின் இனிய மக்கள் நேர்வழியில்
முறையாய் வாழ அருள்கவென மொழிந்து திரும்ப வரும்போது
கறைவாய்ப் பட்ட சுறாக்கத்து கண்ணால் கண்டு பெருமான்முன்
மறைவாய் முழங்க முசுலீமாய் மாறி நன்மை அடைந்தாரே. 66
அலிமாவின் புதல்வியை அனுப்பி
வைத்தார்
பள்ளத் தாக்குப் போர்தன்னில் பகைவர் தாக்குப் பிடிக்காமல்
உள்ள தெல்லாம் விட்டோட உடன்வந் திருக்கும் சிறைப்பட்டார்
பல்லோர்தமக்குள் அலீமாதாய் பயந்த புதல்வி
உசைமாவை
எள்ளா தினிய பரிசுகளை ஈந்து சிறப்பாய் அனுப்பி
வைத்தார். 67
தோழர்க்குக் குறைவாய்த்
தந்தார்
செருவில் பெற்ற செல்வத்தைச்
சிறந்த வீரர் தமகெல்லாம்
பெருமை யோடு பங்கிட்டுப் பிரித்துக் கொடுத்தார் அப்பங்கில்
பெரும்பா தியினைக் குறை சியர்க்கும் பின்னர்
மதினாதுணைவர்க்குச்
சிறுமைப் பகுதி யதுதனையும் செம்மல் கொடுத்த செயல்கண்டே; 68
குறைசியர்க்கே அதிகம்
கொடுத்தார்
இதுநாள் வரைக்கும் உடனிருந்தோம்
இப்போ திணைந்த குறைசியர்க்கோ
இதுதான் பங்கென் றில்லாமல் இம்மாப்பெரிய
பங்கீந்தார்
எதனால் இதுபோல் செய்கின்றார்? என்றே எண்ணித் தமக்குள்ளே
புதிர்போல் கேட்டுக் கொண்டதனைப் புகழார் செவியால்
கேட்டவுடன்; 69
உம்மை அல்லாவின் அருள்
காத்தது
ஆதரவாக இருக்கின்ற அரிய மதீனா தோழர்களே!
வேதனை யால் வாழ்ந்தீர்கள் விழைந்தே உம்மை இறை
காத்தான்
சோதனைக்குள் ஆழ்ந்தீர்கள் தொடர்ந்து காத்தான்
அவனன்றோ?
பதமாய் அன்பை நட்புதனைப் பரிந்து கொடுத்தான்
அவனன்றோ? 70
நீங்கள் என்னைப்
போற்றினீர்கள்
பொய்யன் என்று தூற்றி
எனைப் புறம்போக் கியவர் குறைசியர்கள்
மெய்யன் போடும் நீர் எம்மை மிகவாய்ப் போற்றிக் கொண்டீர்கள்
ஐயன் அல்லா தூதனென அன்பாய் ஏற்றுக் கொண்டீர்கள்
ஐயமில்லை எல்லாமே ஐயமில்லை உண்மைதான். 71
|