|
அபூதர் - நன்னெறி நாடினார்
கெடுமதி யாரைத் தூற்றும் கிபார் எனும் குலத்தைச் சேர்ந்த
வடுவிலா அபூதர் என்னும் வளத்தவர் ஒருவர் தோன்றி
நடுநிலை தவறா மன்னர் நாயகம் தம்முன் நின்று
விடுதலை பெற்றார் உண்மை விளம்பிடும் நெறியைக்
கொண்டே; 48
எவருக்கும் உரையாதீர்
நன்னெறி பற்றிக் கொண்ட
நல்லாரை நோக்கி அண்ணல்
“முன்னெறி மாற்றி அன்பு மொழிநெறி பற்றி னாலும்
புன்னெறி யவர்கள் முன்னே புகலாதீர் தீமை செய்வார்
பின்னெறி அறிந்து சொல்க பிழைவரா” தென்றார்
ஆங்கே! 49
எனக்கு அதுபற்றிக் கவலை
இல்லை
ஆயினும் ஆர்வம் மிக்க அன்பினார் ஆபூதர் ஓடி
மாயினும் கவலை இல்லை மகம்மது பெருமை சொல்லேன்
ஆயின்நான் நன்றி யற்ற அற்பனாய் ஆவேன் என்று
போயினார் ககுபா ஏறிப் பொருந்தியே இரைந்து சொன்னார்; 50
மக்களே! யான் நன்னெறி
சார்ந்தேன்
“மக்களே! மக்கா வாழும் மாந்தரே! இக்கால் நானே
சிக்கலே இல்லா நல்ல செழுநெறி தீனைச் சேர்ந்தேன்
ஒக்கலே! அறிவீர் இந்த உண்மையை அறிவீர்”
என்றே
அக்கலை அபூதர் நல்லோர் ஆர்வுடன் உரைக்கக்
கேட்டே.; 51
குறைசியர் கூடி அடித்தனர்
குறைசியர் கூடி வந்தே “கூச்சலா போடு கின்றாய்?
நிறை சிலை வணங்கு தற்கு நேரிலே இருக்கும் போது
கறைசில மொழிகின்றானின் கருத்திலா மயங்கி விட்டாய்?
முறைசெய வந்தோம்” என்றே முன்னின்று புடைத்தார்
நைய; 52
கிபார் குலத்தினரிடம்
கூறினார்
அப்போதே அவ்வி டத்தில்
அப்பாசு வந்து காத்தார்;
“தப்பேதும் செப்ப வில்லை தகாதவர் அடித்தார்” என்று
முப்போதும் செப்பிச் சென்று முது கிபார் கூட்டம் சேர்ந்து
“செப்பிடும் இறைவன் பாதை சிறந்ததே” என்று சொன்னார்; 53
|