|
இசுலாமியர் வென்றனர்
என்றவர் அமைந்த பின்பே எதிர்தமீம் கூட்டத் தாருள்
நின்றவோர் கவிஞர் பாட, நெடும்புகழ்க் கவிஞர் “கச்சான்”
என்றசீர் முசுலீம் பாட எதிரினில் இருந்தார்
கண்டு
நன்று நன்றென்று தூதர் நபியாரை வாழ்த்தினாரே! 72
இந்த வகையிலும் இசுலாம்
தழைத்தது
அண்ணலார் பக்கம் வானத்(து) ஆண்டவன் இருப்ப தெண்ணி
எண்ணிலாச் செருக்குக் கொண்ட இனப் பனூதமீம்
என்பார்கள்
வண்ணமாய்க் கலிமா ஓதி வாழ்க்கையை உயர்த்திக்
கொண்டார்
இன்ன வா(று) இம்மண்மேலே இசுலாம்தீன் தழைத்த
தாமே! 73
லுமாம் என்பவர் வினாத்
தொடுத்தார்
உயர்பனூ சஅத்என் கின்ற ஓரின மக்கள் தங்கள்
வியன்குலச் சார்பாய்த் தேர்ந்த ஒருவராம் லுமாம்என் பாரை
நயன்மிகும் பெருமா னார்பால் நட்புற அனுப்பி வைத்தார்
செயல்பட அவரும் வந்து செய்யவர் தம்முன் நின்றார். 74
வருந்தாமல் விடை சொல்க
அண்ணலே உம்பால் உற்ற அருவினா தொடுக்க வந்தேன்
புண்ணவை செய்தால் கூடப் பொறுத்திட வேண்டும் என்ன
அண்ணலும் “வினாக்கள் யாவை அறைகுவிர்” என்று சொன்னார்
வண்ணமாய் வந்த பேரும் வள்ளலை வினவி னாரே! 75
நீர் உண்மையானவரா?
இறைவன்மேல் ஆணை யிட்டே இயம்புவீர்; வையமீதில்
இறையவன் தூதன் நீர்என்(று) இயம்புதல் வாய்மை தானா?
அறைகுவீர் என்று கேட்டார் ஐயனும் “ஆமாம்”
என்றார்
முறையுடன் கேட்டார் மீண்டும் மொழிந்தனர்
அடுத்தும் ஒன்றே; 76
“ஆம்!” “ஆம்” என்பதே
விடை
பெருவினாக் கேட்ட வாறே பின்னரும் அன்னார் வானத்(து)
ஒருவன்மேல் ஆணை வைத்தே உறுவினா தொடுத்தார்; “நாளும்
ஒருமைஉற் றைந்து வேளை தொழுதிட உரைத்தான் தானா?
தருகவே விடையே” என்று தகுவினாத் தொடுத்துக் கேட்க; 77
|