6. வானகம் மீண்ட
படலம்
இறுதிப் புனிதப் பயணம்
திருக்குர்ஆன் அருளினார்
இறைவனின் தூத ராக இனியதாம் உலகம் வந்து
நிறைபுகழ் அருளின் மேன்மை நிலையினை எடுத்துக் கூறி
மறைஉரை திருக்குர் ஆனின் மாண்பினைச் சிறக்கக் காட்டி
முறைப்படி பணிகள் செய்தார் முகம்மது நபிக ளாரே! 1
அரபு நாட்டின் நிலையை எண்ணிப்
பார்த்தார்
அன்பிலாக் கொடிய ராக அறிவிலா மடிய ராகத்
தென்பிலாக் கோழையாகத் தெளிவிலா நெஞ்சராக
என்பிலாப் புழுவைப் போல ஏற்றமே இல்லா ராக
முன்பிருந் தவர்கள் வாழும் முறையினைக் கண்ட பின்னே; 2
மறை நெறியினைப் பரப்பினார்
இறை ஒளி அருளின் மாண்பை இசுலாமாய்ப் பரவச் செய்து
கறைஉள மக்கள் வாழ்வைக் களங்க மில்லாமல் ஆக்கக்
குறைகளை எடுத்துக் காட்டிக் கூனினை நிமிரச் செய்து
மறைவழி வாழுகின்ற மனத்தினை உயர்த்தி னாரே! 3
இறைவன் அன்பில் ஆழ்க
வாழ்வதே வாழ்க்கை என்னும் மயக்கத்தில் வீழ்ந்த பேரைத்
தாழ்வதே நோக்க மானால் தவிப்பதே நிலைப்ப தாகும்
ஆழ்வதே இறைவன் தன்சீர் ஆழ்கடல் அன்பில் ஆனால்
சூழ்வதே விண்பே ரின்பம் தோன்றும்முன் விண்ணே”
என்றார். 4
புலம் பெயர்ந்து பத்தாண்டுகள்
ஆயின
புலம்பெயர்ந் திங்கே வந்து போயின ஈரைந்தாண்டே;
நலம்புணர்ந் தரபு மக்கள் நல்லவான் சிறப்பு ணர்ந்தார்
நிலம்புகழ் பெறுதற்கான நெறியினில் நிலைத்து நின்றார்
குலம்புகழ்ந் தொருங்கு சேரும் கொள்கையும் மிகவே
கொண்டார்; 5
|