|
சிறப்பாகச் செய்து
முடித்தீர்கள்
கூறுங்கள் என்று கேட்ட கோமானின் உரையைக் கேட்டோர்
“நீருங்கள் கடமை தன்னை நிலையாகச் செய்து விட்டீர்;
பாருங்கள் பணியைப் போற்றிப் பகர்ந்திட இறைஆ ணையைச்
சீரும்நற் சிறப்புமாகச் செய்தீர்கள்” என்று சொன்னார். 30
இறைவா! நீயே சான்று
நாயகப் பெருமா னாரும் நன்றியால் மகிழ்ந்து வானைத்
தோயதம் கைகள் நீட்டித் “தூய வான் இறைவா! இன்று
நீயன்றோ சான்று மாகி நிற்கின்றாய்” என்று மூன்று
நேயமா முறைகள் சொன்னார் நெகிழ்ந்தனர் அன்பர்
ஆங்கே! 31
விண்ணுரை இறங்கியது
விண்ணகத் திருந்து தூய விரிவுரை விளங்கக் கேட்டார்
“அண்ணலே! இன்று தீனின் அருநெறி நிறைவு செய்தேன்
என்னகப் பேறு தம்மை ஈந்துமை முழுமை செய்தேன்
மன்னிய இசுலாம் தன்னை மக்களுக் கீந்தேன் நானே! 32
அவரவர் தவற்றுக்கு அவரே
பொறுப்பு
விண்ணுரை கேட்ட பின்னர் வீரராம் நபிகளாரும்
தண்ணுரை மேலும் சொன்னார்; “தனிஒரு மாந்தன் செய்த
புண்ணிறை செயல்களுக்குப் பொறுப்பாளன் அவனே யன்றி
மண்ணிலே தந்தை யையோ மகனையோ சாரா” தென்றார். 33
இறைநெறிப்படி
ஆள்வோனுக்குக் கீழ்ப்படிக
வாள்பிடித் தாள்வோன்
எந்த வகைஇனத் தடிமை யேனும்
ஆள்பவன் இறைவன் ஆணை அதன்படி ஆட்சி செய்தால்
தாள்பணிந் தவன்ஆ ணைக்குத் தான்படிந் தடங்க வேண்டும்
தோள்பணிந் தெழும் தோழர்தம் தொழும்சிறப் பிதுவே”
என்றார்; 34
ஐவகைக் கடமையைப்
பின்பற்றுக
ஐவகைக் கடமை மீண்டும் அறிவித்தார், மக்கள் எல்லாம்
“மெய்வகை இறைவன் தாளை மேவுதல் திண்ணம் யானும்
செய்வகை செய்தேன் வானைச் சேர்வதும் அண்மை”
என்றார்
உய்வகை உரைத்த அண்ணல் உறுதிகள் கூறிப் பின்னர்; 35
|