அடக்கம் செய்த இடத்தை
வணக்க இடம் ஆக்காதீர்
அடக்கம் செய்த முன்னோர்கள் அமைந்த இடத்தை அந்நாளில்
நடக்கும் வணக்க இடமாக, நாடிச் சென்றார் அது போலத்
தொடரும் வணக்க நடைமுறைகள் தொடரக் கூடாது எனச்சொல்லித்
தொடர்ந்தார் தங்கள் அருளுரையைத் தூய நபிகள்
நாயகமே! 53
யான் கடமைப்பட்டிருந்தால் கூறுக
“எவருக் கேனும் வாழ்நாளில் இடையூ றொன்று செய்திருந்தால்
அவற்றி னுக்கே ஈடுசெய அணிய மாக இருக்கின்றேன்
தவறு தலாகக் கடன்பட்டுத் தாராமல்நான் இருந்தாலும்
அவர்கள் கடனை அடைத்திடவும் அணிய மானேன்” எனச் சொன்னார். 54
ஏழைக்கு மூன்று திர்ஹம்
தந்தேன்
கோமான் இதனைக் கூறிடவும்
கூட்டம் தன்னுள் இருந்தொருவர்
“ஆமாம் இறைவன் தூது வரே! அன்றைக் கொருநாள் ஓர்ஏழை
காமா றிரந்து வேண்டிடவே கடனாய் மூன்று திர்கம்
கேட்டீர்
ஈமாறதனைச் சொன்னீர்கள் ஈந்தேன் அதனைத்
தரவில்லை; 55
நபியார் கடனை அடைத்தார்
என்றார் தோழர்; பெருமானார் “இனிதாய்ச் சொன்னீர்” எனக்கூறி
ஒன்றி நின்ற அன்பரிடம் உடனே அதனைத் தரச் சொல்லி
“நன்றே முசுலீம் கடமைகளை நயந்து செய்க” எனக் கேட்டும்
அன்றவ் விடத்தில் இறுதியுரை ஆற்றி னார்கள்
நாயகமே! 56
மறுமையில் வீடுபேறு
அடைபவர்
இந்த உலகில் பெருமையினை எண்ணி நாடா நல்லவரும்
எந்த மற்ற மாந்தர்க்கும் இடுக்கண் புரியா தவர்தாமும்
நந்தம் இறைவன் தனக்கஞ்சி நன்மை புரியும் இனியவரும்
அந்த வீடும் நன்மைகளும் அடையப் பெறுவார்
மறுமையிலே! 57
|