பக்கம் எண் :

498துரை-மாலிறையன்

அவனன்றி ஓரணுவும் அசையாது

ஐவேளை தொழுகை கூறி

அவன்புகழ் பொலிய வைத்துச்

செய்வேலை யாவும் விண்ணின்

சிறப்பினால் என்று காட்ட

மொய்வேலை சூழ்ந்த மண்ணில்

முகம்மது நபியை உய்த்துப்

பொய்வேலை ஒழியச்செய்த

புகழவன் அல்லா! வாழ்க!! 4

பொன்னுரை தந்த புகழோன்

தன்னுரை உலகத் துக்குத்

தந்திட வழியாய்; உற்ற

பொன்னுரை தன்னைப் போற்றிப்

புவியினோர் வளர்க்க இந்த

மண்ணுறை மனித ராக

மகம்மது தூதர் தம்மை

மின்னுற அனுப்பி வைத்த

மேலவன் வாழ்க! வாழ்க! 5

வாய்மையைத் தூய்மையை வளர்க்க வந்தவர்

வாய்மையைத் தூய்மை தன்னை

வகையுடன் வளர்க்க; மக்கள்

தீமைஇல் லாமல் வாழ்ந்து

தெளிவுறத் தூதர் கோனைச்

சேய்மைவான் தன்னை நீங்கித்

திருநபி யாகச் செய்த

தாய்மைநல் லுணர்வு கொண்ட

தனியன்! சீர்அல்லா வாழ்க!! 6