நெஞ்சுள் ஒளியுடையவர்
மறவராய் மக்கா மண்ணின்
மனிதராய் உயிர்கட் கெல்லாம்
உறவுடை யவராய் நெஞ்சுள்
ஒளிஉடை யவராய் வாழ
நிறைவானின் தூத ராக
நெடியோரை அனுப்பி வைத்த
இறையவன் இணையில் லாத
இனியவன் வாழ்க! வாழ்க! 7
இசுலாம் நெறியை வளர்த்தவர்
கனிவுடன் மக்கள் எல்லாம்
கலிமாவை ஓதச் செய்தும்
இனிதென இசுலாம் தன்னை
இதயங்கள் ஏற்றுக் கொள்ளப்
பனிதவழ் மொழியி னாரைப்
பாரகம் அனுப்பி வைத்த
தனிஒளிச் சுடராய் ஓங்கும்
தகையவன் வாழ்க! வாழ்க! 8
நல்வாழ்வு மலர வைத்தவர்
உயர்வான பண்பு கொண்ட
உளத்தாரை அனுப்பி வைத்து
நயமான உரையால் அன்பால்
நல்வாழ்வு மலர வைத்த
வியன்வான்மண் புகழ்நல் லானை
வேண்டுதல் வேண்டா மையாம்
இயல்பிலான் இறைவன்
அந்த
ஈடிலான் வாழ்க! வாழ்க! 9
|