அமைதி பிறக்கச் செய்தவர்
அலைகடல் சூழ்ந்த மண்ணில்
அமைதிஇல் லாமல் வாழ்வோர்
நிலைதனை மாற்றி வைக்க நிழல்தரும் நபிக ளாரை
மலைஎனத் தோற்றுவித்தான் மாண்புள இறைவன் அந்தத்
தலைவனை வாழ்க என்று தமிழினால் வாழ்த்து வோமே! 10
தெளிந்த நெறி தந்தார்
திருக்குர் ஆனின் தெளிந்த
நெறியே
சிறக்கு மாறு செய்தபே ராளரை
உலகிற் கனுப்பிய உருவில் லானின்
வலமே உரைத்துநாம் வாழ்த்திடு வோமே! 11
ஒழுக்கமும் உறுதியும்
உடையவர்
ஒழுக்கமும் நெஞ்ச உறுதியும்
கொண்டு
விழுமிய வாழ்வு விளைத்த வேந்தரை
மண்ணிற் கனுப்பிய மாண்புடை யோன்புகழ்
பண்ணிற் கலந்துநாம்பாடிடு வோமே! 12
எளிய வாழ்க்கை வாழ்ந்த
ஏந்தல்
எளிய வாழ்க்கையால் இதயங் களைஎலாம்
ஒளிரச் செய்த உயர்பண் பினரைப்
பாரகம் தன்னில் பணிசெய அனுப்பிய
சீருடை யோன்புகழ் செப்பிடு வோமே! 13
தன்னமில்லாத்
தகையோர்
தன்னல மில்லாத்
தலைமைப் பண்பொடு
பன்னலம் பொருந்திய பழியிலா அண்ணலை
இந்நில வுலகம் எழில்பெற அனுப்பிய
பொன்னிகர் இறைவனைப் போற்றிடு வோமே! 14
|