|
உலகம் பண்பட வந்தவர்
வெற்றுநிலங் களையெல்லாம்
விளைநிலமாய் ஆக்குகிற
கற்றதனிப் பேருழவன் கடும்உழைப்பைப் போல்வழங்க
நற்றுணையே இல்லாமல் நடுங்கியமண் பண்படவே
உற்றமுகம் மதுநபியை உவந்தளித்தாய் வாழியவே! 51
மக்காவைப் பொன்னகராய்
மாற்றியவர்
தன்னிகரில் லாவானத்
தண்ணொளியே! மக்காவைப்
பொன்னகராய் மாற்றிவிடப் புதுமணியாம் முகம்மதுவை
மன்னவராய் அனுப்பிவைத்த மாமணியே! உயிர்க்கெல்லாம்
நன்மைதரும் பரம்பொருளே! நறும்புகழை வாழ்த்துவமே! 52
இறைவா! உன் கனிவைப் புகழ்கிறோம்
பிணிவைத்தார் நெஞ்சினர்தம்
பிழைமாற்றிப் போர்செய்யும்
துணிவைத்தான் தந்து அல்லா தூதுவராம் நபிக்கு
அன்பு
மணிவைத்(து)ஆள் மனத்தினையும் மலர்வித்த
இறைவா! உன்
கனிவைத்தான் உளம்வைத்துக் கசிந்துருகிக்
காணுவமே! 53
முகம்மதுவை வெல்லச் செய்தவனே வாழ்க
கல்வைத்தார் தங்களையும்
கனிவித்தார் பொய்யுடைய
சொல்வைத்தார் தங்களையும் சுடர் ஒளியே பெற
வைத்தார்
வில்வைத்தார் தங்களையும் வினைமாற்றி முகம்மதுவை
வெல்வித்த விண்ணிறைவா! வியன்புகழை வணங்குவமே! 54
இறைவா! உன் அருளே இனிக்கும்
செவி இனிக்க விண்ணுரையே செப்புகிற முகம்மதுவைப்
புவி இனிக்க உன்னுடைய புகழ்த்தூதாய் அனுப்பினையே
கவிஇனிக்கப் பாடிடவும் கருத்தளித்துக் காத்தனையே
எவை இனிக்கும் எமக்கீங்கே? இறையருள் போல் வேறிலையே! 55
|