|
தன்னிகரில்லாத இறைவனை
வாழ்த்துவோம்
இன்னலற எவ்வெவர்க்கும்
இனியநலம் செய்தவரைக்
கன்னலெனும் படிநல்ல கருத்துரைகள் தந்தவரை
மன்னரென வாழ்ந்திருந்தும் வறியவராய்ப்
பொலிந்தவரைத்
தன்னிகரில்லா இறைவன் தந்ததெண்ணி வாழ்த்துவமே! 56
முகம்மது வையப் புகழை
வளர்த்தார்
விண்பெருக்க வாழ்வுதனை விட்டுலகில் நலிந்தவரை
நண்பிருக்கத் தோழர்கள்பால் நாடிமனம் கலந்தவரைப்
புண்பெருக்கும் வையமிதன் புகழ்பெருக்க வந்தவரை
மண்ணிருக்க வைத்தவனின் மலரடியைத் தொழுகுவமே! 57
அனைவருக்கும் அன்பு செய்தவர்
கணை இருக்கும் மனத்தினையும் கனிந்திருக்கச் செய்தவரைத்
திணை இருக்கும் இடமெல்லாம் திகழ்இசுலாம் வளர்த்தவரைப்
புணை இருக்கும் இறைவனடி பொருந்தநமை அழைத்தவரை
அனைவருக்கும் திருநபியாய் அமைத்த தெண்ணித்தொழுதிடுவோம். 58
உலகின் இருட்டுப் போர்வையை நீக்கிய
இறைவா!
நேர் வைக்க ஒன்றுமிலா நேரியனே! மண்ணிதன்மேல்
சீர்வைக்க நபியவரைச் செல்கஎன விடுத்து இருட்டுப்
போர்வைக்குள் இருந்துலகைப் பொலிவுபெறச் செய்தவனே!
கார் வைக்கும் உன்அருளே கனிந்துருகி வேண்டுவமே! 59
அஞ்சத்தக்க துன்பம்
தொடராது
நெஞ்சுருக நெஞ்சுருக நேர்வந்து
தொழுதுன்பால்
கொஞ்சுகிற குழந்தையைப்போல் கொந்தலர்போல் கையேந்திக்
கெஞ்சுபவர் போலிருந்து கேட்கும்நபி துணைஇருக்க
அஞ்சுவகை வருதுன்பம் ஆருக்கும் தொடராதே! 60
|