4. வணிகம் புக்க படலம்
முகம்மதுவின் வருகையினால் வளம்
சேர்ந்தது
அறிவும் செறிவும் உடையவராம் அபூத்தாலிப்பின் இல்லத்தில்
வறியோர் வாழ வந்தநபி வள்ளல் பெருமான் சேர்ந்தவுடன்
சிறிய எளிய வீடெல்லாம் சிறந்த மாளிகை ஆக
வறிய எளிய மக்களெலாம் வளத்தால் சிறந்து
விளங்கினரே! 1
வணக்கம் செய்ய முற்பட்டார்
எல்லா வளமும் நாம்பெற்றே
ஏற்றம் அடைந்தோம் இவைஎல்லாம்
அல்லா அருளால் வந்தவராம் அரிய நபியால் விளைந்தவென
நல்லார் அபூத்தா லிப்பவரும் நன்றாய் எண்ணித்
தெளிந்தவுடன்
ஒல்லும் வகையால் வணிகத்தை உற்றுச் செய்ய
முற்பட்டார்; 2
முகம்மதுவும் வணிகம் செய்ய விரும்பினார்
வணிகப் பொருள்கள் பலவற்றை வாங்கிச் சேர்த்தார் அபூத்தாலிப்பு
அணிசேர் குதிரை ஒட்டகங்கள் அனைத்தின் மேலும் சரக்கேற்றிப்
பணியும் அன்னார் மனைவிக்குப் பயணம் பற்றிச் சொல்லுகையில்
மணிவாய் அன்பர் முகம்மதுவும் வணிகம் செய்ய
விரும்பினரே! 3
போகும்வழி கொடுமையானது ஆயிற்றே
“சாம்நன் னகரம் செலும்பாதை சரியில் லாத பாதைஅதில்
நாம்போம் போது நடுக்கமுற நாலு வகையாம் தீமைகளும்
தாம்நம் முன்னே தோன்றிவரும் தாங்க மாட்டாய் முகம்மதுவே
பாம்பும் கல்லும் முட்செடியும் பாதை எங்கும்
தடைசெய்யும்; 4
விரும்புவதால் இனித்தடுக்க
மாட்டேன்
குடிக்கத் தண்ணீர் கிடைக்காது; கோடை வெயிலோ குறையாது;
துடிக்கத் துடிக்கக் கொப்புளங்கள் தோன்றும்; காலும் வெடிப்பாகும்;
படித்துப் படித்துச் சொல்கின்றேன்; படர்ந்து வரவே நினைக்கின்றீர்;
தடுத்தால் இனியும் பயனில்லை தடையே இல்லை வருகென்றார்; 5
|