இவரைத் தீயவர் முன்கொண்டு
போகாதீர்
“தீயார் முயற்சி அவை எல்லாம் தீமுன் கொசுப்போல் பொசுங்கிவிடும்
தாயார் தந்தை யார்இல்லாத் தனியர் இந்த முகம்மது எனும்
சேயார் தம்மைச் சாம்நகரச் சிறியார் முன்னர்க் காட்டாதீர்
காயார் கனியார் இம்மலரோ கனிந்து சுவையே தரும்”
என்றான். 11
மக்காவுக்குத் திரும்பி அனுப்புங்கள்
வரப்போம் தீமை தனைக்கூறி வாய்மை உரைக்கும் நெறிமுறையால்
“புரப்போம் நந்தம் பொன்நபியைப் பொல்லார் காணச் செல்லாதீர்
சரப்பூஞ் சோலை சாம்நகரைச் சாராது உடனே இச்சேயை
வரப்பொன் மக்கா அனுப்புவதே வலிமை” என்றான் புகைறாவே! 12
சாம்நகரத்தார் புகைறாவைக்
கண்டு போற்றுவது போல் நடித்தனர்
வல்லான் புகைறா இவைகூறி வாய்மை யாளர் முன்னிருக்கப்
பல்லார் எகுதி நசுறானிப் பகையார் எல்லாம் ஒன்றாகிப்
புல்லார் கூடப் போற்றுகிற புகைறா முன்னே வந்தவனைச்
சொல்லால் வாழ்த்தி வணங்கிடினும் சூழ்ச்சி சுமந்து
நின்றாரே! 13
நபி ஒருவர் வரப் போகிறாராம்
“யாவர் நீவிர் ஏன் வந்தீர்? யாரைத் தேடி அலைந்தீர்போர்ச்
சேவல் போன்றே?” எனக்கேட்ட சிறந்த புகைறா முன்னவர்கள்
“காவல் மிக்க சாம் நகரில் கால்வைப் பாராம் நபிஒருவர்
தேவை யில்லாப் புதுநெறியைத் தெரிவிப் பாராம் விடுவோமா? 14
அவரைத் தேடித் திரிகின்றோம்
நாலு திசையும் எம்மாள்கள் நாடித்தேடித்
திரிகின்றார்
மூலைமுடுக்கு களில்எல்லாம் முட்டித் தேடி வருகின்றார்
காலை எங்கு வைத்தாலும் கண்ணில் தப்ப முடியாது
சாலை இதனில் நாங்கள்தாம் சரியாய்த் தேட
வந்துள்ளோம்; 15
|