பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்63


அனைவரும் வணிகம் புரியப் புறப்பட்டனர்

உரியநாள் வந்த போதில் உயர்அபூபக்கர் ஆரி(து)
அருஞ்சுபை(று) அப்பாசு அன்பில் அபூசகுல் உதுபா மற்றும்
பெருஞ்சுமை வணிக மக்கள் பிரியாத மைச றாவும்
அருகினில் பொருந்திச் செல்ல அகம்மது புறப்பட்டாரே! 64

அபூசகுல் முன்னே போனான்

வணிகரை நடத்திச் செல்ல மகம்மதே உரியர் என்றார்
பணிஅபூபக்கர் சொல்லைப் பகைத்து அபூசகுல் எதிர்த்தான்
அணியினைப் புறத்தில்தள்ளி அனைவர்க்கும் முன்னேசென்ற
பிணிஎனும் ஒட்டகத்தால் பிழையோனும் தடுக்கி வீழ்ந்தான்; 65

குப்புற விழுந்து மூக்கு உடைபட்டான்

குப்புற விழுந்த தீயன் கூரிய மூக்குத் தேய்ந்து
சப்பையாய் ஆக வாய்ப்பல் சல்லியாய்ப் பேர்ந்து வீழ
உப்பிய கன்னம் மீதில் ஒழுகுசெந் நீரும் தோய
அப்புறம் உத்து பாவே அனைவர்க்கும் முன்னே போனான்; 66

உத்துபா வேங்கைக்கு அஞ்சி அதிர்ச்சி அடைந்தான்

ஒட்டியே போன அந்த உத்துபா ஒட்டகத்தைக்
கட்டியே தள்ளி வேங்கை கடித்துடன் இழுத்துப் போக
மட்டிலா அதிர்ச்சி உற்று மயங்கிய உத்து பாதன்
முட்டியில் முதுகில் உற்ற முழுவலி இழந்து போனான். 67

அதன்பின்னர் ஆசு முன்னிலை வகித்துப் போனான்

முன்னிலை வகித்துச் செல்ல முடியாமல் உத்பா மற்ற
நன்னிலை வணிகருக்கு நவின்றனன்; நடக்க ஒண்ணாத்
தன்னிலை கூறக் கேட்டோர் தகுதியான் ஆசு என்பானை
முன்னிலை வகிக்குமாறு மொழிந்தவர் பின்னால் போனார். 68

***