துன்பங்களுக்கெல்லாம் முகம்மதுவே காரணம்
என்றான் அபூசகுல்
பாதை தெரியா தாவதுவும் பலவாய்த் துன்பம் அடைவதுவும்
ஊதைக் காற்றில் ஒடுங்குவதும் உறுநா வேட்கை வாட்டுவதும்
மேதை போலப் பேசியவன் விளைத்த பாவச்செயல்” என்றான்
மோதிக் கல்லில் முட்டியதால் மூக்கு டைந்து அபூசகுலே. 10
முகம்மது பின் போனால் நலம் பெறுவோம்
மூக்குடைந்தோன் சொல்கேட்ட முறைதவறாத அபூபக்கர்
காக்கும் நந்தம் முகம்மதுவைக் கக்கும் நச்சுச் சொல்லுரையால்
தீய்க்கு மாறு பேசாதீர்; தெளிந்த நல்லார் சொல்கின்ற
போக்கில் சென்றால் புகழ்பெறலாம் புகழ்சாம் நகரை அடைந்திடலாம்; 11
அதையே வணிகர்கள் ஆமோதித்தனர்
என்றார்; உடனே நல்லார்கள் இயம்பல் போல முகம்மதுவும்
சென்றார் முன்னே ஒட்டகமும் செல்லும் போதே இறையருளும்
ஒன்றாய் ஆகி நன்மைசெய ஒளியே தோன்ற இருளகல
நன்றாய்ப் பாதை தெரிந்ததென நடந்தார் நபிகள் நாயகமே! 12
ஒட்டகம் காலால் மண்ணைக் கிளற வைத்தார்
உடைந்த பானை அதுகூட ஒட்டும் வல்லோன் அருளாலே
நடந்த நல்லார் பாதைஎலாம் நன்மை நடக்கக் கண்டார்கள்
படர்ந்த காட்டில் நீர்வேண்டிப் பரமன் தூதர் ஒட்டகத்தைக்
கடந்த மண்ணைக் கால்களினால் கலைத்துத் தோண்டச் செய்தார்கள். 13
ஆறு பெருகி ஓடிற்று
கோமான் தங்கள் குறிப்பறிந்து கூனார் முதுகு விலங்கதுவும்
ஆம்ஆறு அதனை உருவாக்க அருங்கால் கொண்டு கிளறியதும்
பாய்மாண் பாறு பக்கமெலாம் படர்ந்து தண்ணீர் பெருகியதும்
ஈமான் கொண்ட வணிகர்கள் எல்லாம் வாழ்த்திப் பேசினரே! 14
அனைவரும் முகம்மதுவைப் பின்பற்றிப்
போனார்கள்
போகும் சாலை இடமெல்லாம் பொன்னார் சோலை உருவாகி
வேகும் வெய்யோன் வெயில்போக்கி வேளை தோறும் இளைப்பாற
ஆகும் கனியும் சுவைநீரும் அருந்தக் கிடைக்கும் நலம்பெற்றுப்
பாகும் கனியும் போல் கருத்துப் பகரும் நல்லார் பின்போனார். 15
|