பக்கம் எண் :

78துரை-மாலிறையன்

இப்பாம்பு தீமை செய்யாது

கனிவுறு நெஞ்சக் கவின்முகம் மதுவே!

கண்முனர் இருக்கும்இப் பாம்போ

இனிநலம் பெற்ற இயல்பின தாகி

இடர்செய முற்படா திருக்கும்;

தனியவர் உங்கள் தகும்அடி தொழவே

தவழ்ந்துமுன் அன்பினைப் பெருக்கும்

துணிவுடன் செல்க தொடர்ந்தருள்க” என்றே

சொல்லிய ஒலியும் நீங்கிற்றே; 72

பாம்பு பேசியது

ஆண்டவன் அருளை அகம் பொருத்தியவர்

அன்பினைப் போர்வையாய்க் கொண்டு

நீண்டஅப் பாம்பை நெருங்கியே கையால்

நீவியும் நெருடியும் விட்டார்;

“பூண்டமாதவனே! புண்ணியா! உந்தம்

பொன்னடி பணிந்ததன் பயனாய்

ஈண்டெலாப் பேறும் எய்தினேன்” என்றே

இயம்பிய பாம்புரை கேட்டார். 73

உம்மைக் கண்டதனால் பாவம் தொலைந்தது

“ஆட்சியே புரிய அகம்மது வந்தீர்!

அழிசெயல் பாவமே தொலைத்தேன்

மாட்சியைக் காண வருவிரோ என்று

மண்ணிலே நாள்தோறும் இளைத்தேன்

காட்சியே தந்தீர் கனிந்தனன் ஐய!

காட்டிலே விண்ணகம் முளைத்தே

ஆட்சியே புரியும் அருநிலை கண்டேன்

அண்ணலே” எனப் பணிந் ததுவே! 74