பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்79


பாம்புரை கேட்டவர் வியந்தார்

புலம்பியோர் எல்லாம் புதுநலம் பெற்றார்

புலமையோர் போல்உரை பகர்ந்தார்

கலங்கியோர் எல்லாம் கனிந்தனர் கண்டார்

காலிலே வலிமையே கொண்டார்

நலம்புணர் பாம்பு நவின்றதைக் கேட்டோர்

நறுமுகம் மதுவினை வாழ்த்தி

நிலம்புது வாழ்வை நெருங்கிட வந்த

நிழல்முகம் மதுஇவர்” என்றார். 75

ஐயனே உம்மால் உலகம் தழைக்கும்

தணிவொடு பணிந்து தாழ்ந்தஅப் பாம்பு

தலைவர்முன் எழுந்திட நாணி

மணிமுகம் தன்னை இனிஎவண் காண்பேன்

மகம்மது வேஎன வாழ்த்திப்

பணிவுடன், தாங்கள் பகர்கலி மாவே

பயிரென விளைந்துபின் ஓங்கும்

திணிந்தமண் வையம் செழித்திடும் என்றே

செப்பிய பாம்பினை நோக்கி; 76

பாம்பு வேறிடம் நாடிப் போயிற்று

“நல்லவர் பல்லோர் நடந்திடும் வழியில்

நாளும்நீ ஊர்ந்திடு வாயேல்

அல்லலே உறுவாய் ஆகையால் நீதான்

ஆள்நடந் திடா அக் காட்டில்

மெல்லவே செல்க” எனவிளம் பியவர்

மேன்மையை உடன்அது நினைத்து

வல்லவர் அவர்தம் முன்சலாம் உரைத்தே

வளர்ந்தகான் நெறியில் ஊர்ந்ததுவே! 77

***