பக்கம் எண் :

இறை பேரொளி நபிகள் நாயகம் அருட் காவியம்95


அப்துல்லா பெற்ற மைந்தர்

எளியவன் வேண்டு கோளை ஏந்தலும் கேட்டு, “நல்லாய்
மலிபுகழ் மக்கா ஊர்பேர் மகம்மது கிலாபின் மைந்தர்
பொலிகுசை மகன்மு னாவின் புதல்வராம் ஆசிம் செல்வன்
ஒளிமுத்த லிப்பு மைந்தர் அப்துல்லா தந்தை யாவார். 88

நம் குலமுறையைக் கெடுக்க வந்தான்

ஆர்எனச் சொன்ன ஐயன் அவர்தமை அறிந்த போதே
“ஊரினில் இருக்கின்றோரே! ஓடியே வருக! இந்தப்
பேரினில் ஒருவன் வந்து பெருமையைக் குலைப்பான்” என்று
கூறினீர் அன்றோ? அந்தக் கொடியவன் வந்தான்” என்றே; 89

தடியும் கம்பும் கொண்டு ஓடி வந்தனர்

ஓங்கிய கூச்சல் போட்டான் ஓலத்தைக் கேட்ட மக்கள்
தாங்கிய தடியும் கம்பும் தாம்கொண்டு வந்து கத்தி
வீங்கிய தொண்டைக் கொல்லன் வெவ்வுலைக் களத்தில் சூழ்ந்தார்
ஆங்கவர் வருகை கண்ட அருமக்கா வணிக மேலோர்; 90

வந்தவர் விலகிப் போனார்

கொல்லனின் உலைக் களத்தில் குழுமியோர் தம்மைக் கண்டு
வல்லவர் வணிக ரேனும் வந்தவர் வலியர் என்றே
மெல்லவே விலகி ஊரின் மீமிசை அரணை நீங்கி
நல்லவ ரோடு சேர்ந்து நன்மக்கா நோக்கிப் போனார்; 91

அனைவரும் மாளிகை ஒன்றைக் கண்டனர்

வானினைத் தொட்டுப் பார்க்கும் மாளிகை ஒன்றைக் கண்டு
தேனினைக் கண்டார் போலத் தெருவிலே நின்று பார்க்க
மேல்நினை வொன்றே கொண்ட மேன்மையான் ஊசா என்பான்
ஆனமுக் காலம் எல்லாம் அறிந்தவன் ஆங்கே வந்தான்; 92

தாங்கள் யார் என்பதைக் கூறுக

ஒளிநாணும் படிமுன் நின்ற ஒளிர்முகம் மதுவைப் பார்த்து
வெளிவான்மண் வளிநீர் வேண்டி விழைந்திடும் தீஒப் போரே!
எளியேன்முன் தாங்கள் இன்னார் என்பதைச் சொல்க” என்றான்
அளியாரோ அனைத்தும் கூற அரியனோ அருகில் நின்ற; 93