பக்கம் எண் :

 உரை நலன்கள்39

அரியைப் படைத்தலால் அயன் கடவுள் என்றும் அயனைப் பெற்றுக் காத்தலால் அரி கடவுள் என்றும் மாறுபட்டுழி, இவ் விருவரையும் அழித்தலான் இவர் கடவுள் அல்லர்; அரனே கடவுள் என்பதுபோல - 7 உரை

கற்றலின் சிறந்த கருவி ஆரியன் கருத்தில் அருள்வர நடத்தலேயாம். 8 உரை

நாரா யணன்பூ ஓரா யிரத்தைக்
கரத்தரல் கொய்து அரற்கே கொடுத்துச்
சக்கரச் சிறுமையின் நீங்கி நற்சுவைப்
பாற்கடல் கண்ணே பள்ளி கொண்டான்.                                         15

என்ற காரக உதாரணம் நோக்கற்குரியது.

எடுத்துக்காட்டுக்கள் சிவபெருமான் உயர்ச்சியும் சிறப்பும் தோன்ற அமைந்துள்ளன:

அவன்கண் பதினைந்து, அவன் தலை ஐந்து, நெற்றிக்கண் நெருப்பு. -                19 உரை

அரிக்குச் சக்கரம் கொடுத்தான் அரன் - இழிந்தோன் ஏற்றல்; அரற்குக் கண்அலர் கொடுத்தான் அரி - உயர்ந்தோன் ஏற்றல். -                                                    36 உரை

முருகனது வேல், சம்பந்தனது தமிழ், சம்பந்தனது பிள்ளைத் தமிழ். -                40 உரை

நெற்றியின்கண் விழி. -                                                       42 உரை

மதுரையை நீக்கினான், மதுரையின் வடக்கு சிதம்பரம்.

மதுரைக்கு வடக்கு சிதம்பரம். - 48 உரை

‘கால காலனைக் காண்கின்ற போது
காலனைத் துரத்தும்அக் காட்சி தானே’