106நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கண்டிப்பு தண்டிப்புக் கடுபிடி காட்டி
வருவார் போவார் வார்த்தைகள் பேசுவார்
பார்த்த உடனே பயபக் தியோடு
மாணாக்கர் அவர்களை மதித்து வணங்குவர்;
ஆனால்,       15

பண்டித ரிடத்தில் மாத்திரம் பயப்படார்.
வடமொழிப் பண்டிதர் வைதீக மானவர்;
அநித்திய உலகில் அசட்டை போலத்
தம்முடைக் கடமையைத் தாம்முடித் திட்டே
எவரென்ன செய்யினும் ஏனென்றும் கேளார்;       20

அவரைப் பற்றிநான் அதற்குமேல் அறியேன்.
தமிழ்மொழிப் பண்டிதர் தண்மையே உருவாய்
‘அடக்கம்‘ என்பதன் அறிகுறி யாமென
‘அமைதி‘ என்னும் சொல்லின் அர்த்தமாய்ச்
சாந்த மயமாய்ச் சந்தடி யின்றி       25

இருக்கிற இடமே தெரியா திருப்பார்.
சிறியோர் பெரும்பிழை செய்திட் டாலும்
அடிக்கவோ பிடிக்கவோ அவர்கை கூசும்.
வழுக்கியும் அவருடை வாயி லிருந்தோர்
இழுக்குடை வார்த்தை எதுவும் வராது.       30

சொற்பொழி வென்று சொல்லவந் தாலும்
‘பண்டிதர்‘ பேச்சுப் பழங்கதை யாகவே
பக்தியைக் குறித்தும் முத்தியைப் பற்றியும்
ஞானம் என்றும் மோனம் என்றும்
அன்பைப் பற்றியும் அருளைப் பற்றியும்       35

சத்தியம் என்றும் சாந்தம் என்றும்
இளைஞர் காதுக் கின்பம் தராது.
அதனால் தானோ, என்னவோ அறியேன்.
பண்டிதர் என்றால் பயமற்றுப் போனது!
நான் படித்திட்ட நாளில்நான் அறிந்த       40