புலவர் சிவ. கன்னியப்பன் 109

போதும் போதும் போதுமென் றாச்சு"
என்று சொல்லி ஏளனம் செய்தார்.
என்னுடன் இருந்த ஏழெட்டுப் பேரும்
ஆங்கிலப் பள்ளியின் அனுபவ முள்ளோர்
பண்டிதர் பேச்சைப் பரிகாசம் பண்ணிய       105

அந்தக் கேலியை ஆமோ தித்தனர்.
கூடச் சேர்ந்து குறைசொலா விடினும்
பண்டிதர் என்பதைப் பரிகாசம் செய்ததைக்
கண்டிக் காமல்நான் கம்மென் றிருந்தேன்.
சேர்ந்து கொஞ்சம் சிரித்து விட்டேன்.       110

அதனால் என்னிடம் அதிக மதிப்புடன்
கூவி யழைத்தவர் கோபம் கொண்டார்.
அதன்மேல் எனக்கும் அறிவு பிறந்தது.
பண்டிதர் என்றால் பரிகாசம் செய்வதைக்
கண்டனம் செய்து கனிந்து பேசிக்       115

கந்த சாமியின் கருத்தின் படிக்கே
எல்லோரும் சேர்ந்து போய்வர இசைந்தோம்.
போனோம்.
பண்டிதர் அவர்களைப் பார்த்தேன்; பார்த்தால்,
தாட்டிகம் இல்லை; தடபுடல் காணோம்!       120

உயரமும் இல்லை; உருவமும் ஒல்லி;
மாநிற மென்ன மதிக்கத் தகுந்தவர்
கல்வித் தெய்வம் கலைமகள் வண்ணமாய்
வெள்ளை வெள்ளேரென வெளுத்த வேட்டியும்
அதனிலும் வெளுத்த அங்கச் சட்டையும்       125

அங்கியின் மேலொரு அங்கவஸ் திரமும்,
தலையில் துல்லிய வெள்ளைத் தலைப்பா
கண்ணாடி மூடிய கனற்பொறி போன்று
குளிர்ச்சியும் கூடிய கூர்ந்த கண்கள்,
மகிழ்ச்சி ஊட்டும் மலர்ந்த முகத்துடன்       130

110

‘பண்டித‘ ராகவே பண்டிதர் இருந்தார்.
இடக்கை விரல்கள் இரண்டை நீட்டி
கருத்துக் கேற்பக் கையை ஆட்டி
வலக்கைத் தலத்தில் அடித்து வைத்துச்
சங்கீத மத்தியில் சாப்புப் போல       135

அடித்துப் பேசி அழுத்தம் திருத்தமாய்ச்
சுளைகளை யாகச் சொற்களைச் சொல்லிப்
பதம்பத மாகப் பதியும் படிக்கே
அணியணி யாக அடுக்கிய கருத்தொடும்
இயக்கி விட்டதோர் எந்திரம் போலத்       140

தங்கு தடையெனல் எங்குமில் லாமல்
எத்தனை தூரம் எட்டநின் றாலும்
கணீர்க ணீரெனக் காதிலே விழும்படி
செவிவழி இனிக்கும் செந்தேன் போலக்
கற்பனை மிகுந்த கவினுடைக் கவிதையாய்க்       145

காதாற் காணும் கனவே போலத்
தொல்காப் பியத்தின் சூத்திரம் தொடரச்
சங்க நூல்களின் சாறு வடித்துச்
சிலப்பதி கார ஒலிப்பும் சேர்த்துத்
திருக்குறள் ஞானப் பெருக்கம் திகழத்       150

திருமந் திரத்தின் பெருமை திரட்டிக்
கம்பன் பாட்டின் செம்பொருள் பெய்து
தேவார த்தின் திருவருள் கூட்டித்
திருவா சகத்தின் தேன்சுவை நிறைத்துத்
திருவாய் மொழியின் தெளிவையும் ஊட்டி       155

எம்மத மாயினும் சம்மதம் என்னும்
சமரச சுத்தசன் மார்க்கம் தழுவிப்
பண்டைய அறிவைப் புதுமையிற் பதித்துப்
பண்டிதர் பிறரிடம் பார்த்தறி யாத
அரசியல் சரித்திர அறிவுகள் பொருத்திக்       160

111

கள்ளமில் லாத உள்ளத் தெளிவுடன்
அன்பு ததும்பிட ஆர்வம் பொங்கக்
கற்றவர் மனத்தை முற்றிலும் கவர்ந்து
பாமர மக்களைப் பரவசப் படுத்தி,
‘காந்தீயத்தின் கருத்துகள் எல்லாம்       165

தமிழன் இதயம் தழுவிய வாழ்வே‘
என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டிய
அற்புதம் மிகுந்த சொற்பொழி வதனைக்
கேட்டேன்; இன்பக் கிறுகிறுப் புற்றேன்
இரண்டரை மணியும் இப்படிப் பேசிக்       170

கடைசியில் பேச்சின் கருத்துரை யாக,
முறைபிற ழாமல் உரைதள ராமல்
சொன்னதை யெல்லாம் சுருக்கிச் சொல்லி
இறைத்த முத்தை எடுத்துச் சேர்த்துத்
தொடுத்த மாலைபோல் தொகுத்துக் கூறிக்       175

கேட்டவர் நெஞ்சில் கிடந்து புரளக்
கூப்பிய கையுடன் குனிந்து கொடுத்து
உரையை முடித்து உட்கார்ந்து விட்டார்.
சொப்பன இன்பத் தொடர்ச்சி நிற்கவே,
திடுக்குற விழித்துத் திகைப்பவன் போலும்,       180

சங்கீதம் மத்தியில் தடைப்பட் டதுபோல்,
ஓடின சினிமா ஒளிப்படம் கேடுற்(று)
இடையில் அறுத்தே இருட்டித் ததுபோல்
என்னுடை உணர்ச்சிகள் இடைமுறிந் தேங்கினேன்.
இன்னான் எனவெனை ஏதும் அறியாப்       185

பண்டிதர் அவரையே பார்த்துப் பார்த்துப்
புருடனைக் கண்ட புதுப்பெண் போல -
அன்போ ஆசையோ அடக்கமோ ஒடுக்கமோ
அச்சமோ நாணமோ மடமையோ அறியேன் -
என்னையும் மறந்து என்னுடை மனது       190

112

பண்டிதர் இடத்தில் படிந்து விட்டது.
இன்பத் தமிழ்மொழி இலக்கியம் சொல்வதே
காந்தீ யத்தின் கருத்துகள் என்பதை
என்னைப் போலவே எண்ணிய பண்டிதர்
என்னிலும் அழகாய் இணைத்துச் சொன்னதை       195

எண்ணிக் கொண்டே தலைகுனிந் திருந்தேன்.
சிறிது நேரம் சிந்தனை செய்தபின்,
பண்டிதர் அவர்களைப் பார்க்கும் ஆசையால்
மீண்டும் நிமிர்ந்து மேடையைப் பார்த்தேன்.
அந்தப் பண்டிதர் அங்கே இல்லை.       200

எவரோ பேசுதற்(கு) எழுந்து நின்றார்.
"எங்கே? பண்டிதர் எங்கே?" என்றுநான்
பக்கத்தி லிருந்த பலரையும் கேட்டேன்.
பிரிதோர் ஊரிற்பேசுதற் கருதி
அவசர மாக அவர்போய் விட்டார்"       205

என்றொரு நண்பர் என்னிடம் சொன்னார்.
கூட்டம் முடிந்தபின் கொஞ்சிக் குலவிக்