கள்ளமில் லாத உள்ளத் தெளிவுடன் அன்பு ததும்பிட ஆர்வம் பொங்கக் கற்றவர் மனத்தை முற்றிலும் கவர்ந்து பாமர மக்களைப் பரவசப் படுத்தி, ‘காந்தீயத்தின் கருத்துகள் எல்லாம் 165 தமிழன் இதயம் தழுவிய வாழ்வே‘ என்பதைத் தெளிவாய் எடுத்துக் காட்டிய அற்புதம் மிகுந்த சொற்பொழி வதனைக் கேட்டேன்; இன்பக் கிறுகிறுப் புற்றேன் இரண்டரை மணியும் இப்படிப் பேசிக் 170 கடைசியில் பேச்சின் கருத்துரை யாக, முறைபிற ழாமல் உரைதள ராமல் சொன்னதை யெல்லாம் சுருக்கிச் சொல்லி இறைத்த முத்தை எடுத்துச் சேர்த்துத் தொடுத்த மாலைபோல் தொகுத்துக் கூறிக் 175 கேட்டவர் நெஞ்சில் கிடந்து புரளக் கூப்பிய கையுடன் குனிந்து கொடுத்து உரையை முடித்து உட்கார்ந்து விட்டார். சொப்பன இன்பத் தொடர்ச்சி நிற்கவே, திடுக்குற விழித்துத் திகைப்பவன் போலும், 180 சங்கீதம் மத்தியில் தடைப்பட் டதுபோல், ஓடின சினிமா ஒளிப்படம் கேடுற்(று) இடையில் அறுத்தே இருட்டித் ததுபோல் என்னுடை உணர்ச்சிகள் இடைமுறிந் தேங்கினேன். இன்னான் எனவெனை ஏதும் அறியாப் 185 பண்டிதர் அவரையே பார்த்துப் பார்த்துப் புருடனைக் கண்ட புதுப்பெண் போல - அன்போ ஆசையோ அடக்கமோ ஒடுக்கமோ அச்சமோ நாணமோ மடமையோ அறியேன் - என்னையும் மறந்து என்னுடை மனது 190 |