பண்டிதர் இடத்தில் படிந்து விட்டது. இன்பத் தமிழ்மொழி இலக்கியம் சொல்வதே காந்தீ யத்தின் கருத்துகள் என்பதை என்னைப் போலவே எண்ணிய பண்டிதர் என்னிலும் அழகாய் இணைத்துச் சொன்னதை 195 எண்ணிக் கொண்டே தலைகுனிந் திருந்தேன். சிறிது நேரம் சிந்தனை செய்தபின், பண்டிதர் அவர்களைப் பார்க்கும் ஆசையால் மீண்டும் நிமிர்ந்து மேடையைப் பார்த்தேன். அந்தப் பண்டிதர் அங்கே இல்லை. 200 எவரோ பேசுதற்(கு) எழுந்து நின்றார். "எங்கே? பண்டிதர் எங்கே?" என்றுநான் பக்கத்தி லிருந்த பலரையும் கேட்டேன். பிரிதோர் ஊரிற்பேசுதற் கருதி அவசர மாக அவர்போய் விட்டார்" 205 என்றொரு நண்பர் என்னிடம் சொன்னார். கூட்டம் முடிந்தபின் கொஞ்சிக் குலவிக் கலந்துபேசிக் களிப்பெலாம் சொல்லிப் பண்டித ரோடு பழக நினைத்தஎன் ஆசை கெட்டதால், அவதி மிகுந்தது. 210 மற்றவர் பேச்சில் மனங்கொள் ளாமல் உடனே புறப்பட்(டு) ஊருக்கு வந்தேன். கண்ட பண்டிதர் கண்ணி லிருந்தார். கேட்ட பேச்சும் நெஞ்சில் கிளர்ந்தது. அந்த பண்டிதர் அவரே அவர்தாம் 215 கலியாண சுந்தர முதலியார் காண்க. அவரை முதல்முதல் பார்த்த(து) அப்படி அந்நாள் தொடங்கி இந்நாள் அளவும் என்னுடை நினைவில் என்றும் நின்றுள்ளார். எண்ணும் போதெலாம் இன்பம் ஊறும். 220
338 ‘வாரவர் போறவர்‘ யாரையும் நம்பி வாடின காலங்கள் ஓடின தம்பி! வீரமும் தீரமும் வெற்றுரை யாமோ? விடுதலை வேண்டுதல் விட்டிடப் போமோ? 4 முத்தமிழ் நாடுஎன்றன் முன்னையர் நாடு; முற்றிலும் சொந்தம் எனக்கெனப் பாடு; சற்றும் உரிமையில் லாதவர் ஆளச் சரிசரி யென்றது போனது மாள; பக்தியின் அன்பினில் பணிபல செய்வோம்; பயப்பட்டு யாருக்கும் பணிந்திடல் செய்யோம்; சத்தியம் சாந்தத்தில் முற்றிலும் நின்றே சடுதியில் விடுதலை அடைவது நன்றே. 5 212. வாழ்க நம் நாடு நம்நாடு செழிக்க வேண்டும் நாமெலாம் களிக்க வேண்டும் நம்நாடு மட்டும் வாழப் பிறர்நாட்டைத் தவிக்கச் செய்யும் வெம்நாடு களுக்கே வரமோர் விழுமிய ஞான மார்க்கம் எம்நாடு தந்தது என்றே இந்தியன் மகிழ வேண்டும். 1 கண்டவர் மகிழ வேண்டும் கேட்டவர் புகழ வேண்டும் கொண்டவர் குலவ வேண்டும் குறைந்தவர் நிறைந்து மெச்ச அண்டின எவரும் அச்சம் அடிமையை அகற்று மாறு தண்டமிழ் அலைகள் வீசி நம்நாடு தழைக்க வேண்டும். 2
339 இலக்கண உயர்வில் சொல்லின் இனிமையில் பொருளில் வாழ்வின் விலக்குகள் விதிகள் வைக்கும் விதத்தினில் விநயம் தன்னில், கலைக்கொடு தனிமை காட்டும் கவிதையின் கனிவில் கற்றோர் தலைகொளும் தமிழைப் போற்றி நம்நாடு புதுமை தாங்கும். 3 எந்தநாட் டெவர்வந் தாலும் எம்மொழி பேசி னாலும் சொந்தநாட் டவர்போ லிங்குச் சுகித்துநிம் மதியாய் வாழத் தந்தநாடுலகில் இந்தச் தமிழகம் போல்ஒன்(று) உண்டோ? அந்தநம் புகழைக் காத்து நம்நாடு அன்பே ஆற்றும். 4 அன்பினால் கலந்து வாழ்ந்தே ‘ஆரியன்‘ ‘அயலான்‘ என்னும் வன்புஎலாம் வரும்முன் னாலே வள்ளளார் வளர்த்த வாய்மை என்பெருந் தமிழால் இந்த இருநில மக்கட்கு எல்லாம் இன்பமே தருவ தாக நம்நாடே இசைக்க வேண்டும். 5 அன்னியம் அறிவிற்கு இல்லை அன்பிற்கும் அளவே இல்லை என்னவே உலகில் மற்ற எவரெவர் மொழியும் ஆய்ந்து
340 தன்னொடும் வாழ வைத்த தமிழ்மொழி பெருமை தாங்கி நன்னெறி விளக்காய் நின்று நம்நாடு நலமே நல்கும். 6 புதுத்துறை அறிவைத் தேடிப் போய்அலைந்(து) உழன்று நாடி விதப்பல விஞ்ஞா னத்தை விரித்திடும் மெய்ஞ்ஞா னத்தால் பொதுப்படக் கலைகள் எல்லாம் தமிழிலே புதுமை பூண மதிப்பொடே எவரும் போற்ற நம்நாடு மணக்க வேண்டும். 7 213. இந்தியத் தாய் புலம்பல் காலக் கதியடியோ கைவிரித்து நான்புலம்ப ஆலம் விதையெனவே அளவிறந்த மக்கள்போற்றும் ஞாலத்தில் என்னைப்போல் தவித்தால் ஒருத்தியுண்டோ? நீலக் கடலுலகில் நீடித்தும் பிள்ளைகளால் கோலம் இழந்துநிலை குலைந்துருகி வாடுகின்றேன்! 1 மெத்தப் பகட்டுடையாள் மேற்கத்திப் பெண்ணொருத்தி ‘அத்தை‘யெனக் கூவியென்றன் ஆசார வாசலிலே தத்தித் தடு |