நினைக்கும் பொழுதெலாம் நெஞ்சம் குளிரும். பத்தாண்டுகள் தாம் பரந்தபிற் பாடு பட்டணம் சென்றுநான் நேரிற் பழகினேன். அதன்மத் தியிலே அவரும் நானும் கடிதத் திலேதான் கலந்து மகிழ்ந்தோம். 225
என்னுடைப் பாட்டென எதுபோ னாலும் ‘தேசபக்தன்‘ தினசரி அதனிலும் ‘நவசக்தி‘ தன்னிலும் நன்றாய் அமைத்துச் சிறப்புடன் வெளிவரச் செய்வரச் செம்மல் பக்கத்தில் அவருடன் பழகிய போதுதான் 230 சீலம் நிறைந்த செம்மனக் குன்றாம் ஒழுக்கம் உயர்ந்த உத்தம சீலர் முதலியார் பெருமையை முற்றிலும் அறிந்தேன். தமிழ்நாடு தந்த தலைவர்கள் தம்முள் காந்தீயத்தின் உட்பொருள் கண்ட 235 சிலருள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் முதலியார் என்பது முற்றிலும் உண்மை. ‘தேசபக்த‘னில் அவர்செய்த சேவையும் ‘நவசக்தி‘ மூலமாய் நாட்டிற் குழைத்ததும் புகழ்ந்தால் அதுபெரும் புத்தக மாகும். 240 தமிழிலே எண்ணித் தமிழிலே பேசித் தமிழருக் காகவும் தனித்தொண் டாற்றுவார் சந்தி விகாரச் சந்திடைச் சிக்கிய வழக்கற்றுப் போன வார்த்தைகள் மலியப் ‘பழந்தமிழ்‘ என்று பலபேர் பேசின 245 அந்தத் தமிழையும் அழகுறச் செய்து புத்தம் புதுப்பல சொற்றொடர் புகுத்திக் கேட்கக் கேட்கக் கிளரச்சி யுண்டாகும் தனியொரு தமிழ்நடை தந்தவர் சுந்தரர். இந்தியத் தாயின் விடுதலை எண்ணமே 250 |