நிறைந்த அவருடை நெஞ்சம் குமுற, காந்தீ யத்தையே கடைப்பிடித் தவராய்ச் சாது வாகவே தம்கடன் தாங்கி அச்சுத் தொழிலும் அச்சாணி போலவே கண்ணிற் படாமல் கடமையைச் செய்து 255 பழமையும் புதுமையும் படியும் சந்தியாய்ப் பாட்டாளி மக்களின் பக்கத் துணையாய்ப் பெண்குலப் பெருமைக்கு பெருத்த காவலாய்ச் சைவ நெறிக்கொரு சமரசத் தூதனாய்ப் பட்டணத் திருந்தும் பாட்டில் லாமல் 260 ஓசையில் லாமல் ஓய்வற உழைக்கிறார். முத்தமிழ்க் கலியாண சுந்தர முதலியார் அவருடை அறுபதாம் ஆண்டு நிறைவைப் பரவிப் புகழ்ந்து பல்லாண்டு பாடி நலம்குறை யாமல் இன்னமும் நாற்ப(து) 265 ஆண்டுக ளேனும் அவர்வாழ்ந் திருக்கச் சிவத்தைக் கோரித் தவத்தைச் செய்வோம். நந்தமிழ் மக்கள் நல்வாழ்வு பெறவே. வாழ் கல்யாண சுந்தரன் வாழி! வாழிபல் லூழி வாழிவா ழியவே! 270 குறிப்புரை:-ஊழி - பல ஆண்டுகள்; ஓசையில்லாமல் - அமைதியாய் இருந்து; சிக்கி -தடைபட்டு; அவசரமாக - விரைவாக, துரிதமாக; வார்த்தைகள் - சொற்கள்; முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்; சிவத்தைக்கோரி - சிவபெருமானை நினைந்து. |