புலவர் சிவ. கன்னியப்பன் 159

மோகன தாசன் கரம்சந்த் காந்தி
முத்தரும் சித்தரும் முயன்றிடும் சாந்தி
சாகரம் நாணுறும் சற்குணப் பெருமை
சமரச உணர்ச்சியின் கற்பகத் தருவாம்.       (காந்தி)2

வேறுதவம் நமக்கு வேண்டிய தில்லை.
வித்தகன் காந்திபெயர் விருப்புடன் சொல்ல
கூறும் தவப்பலனைக் கொடுத்திடும் அதுவே
குறைவற்ற வாழ்க்கையும் நடத்திடல் பெறுவோம்.       (காந்தி)3

107. அன்பிற்கு உயிர் தந்தோன்

பல்லவி

பிறர்க்கென்றே தம்முயிரைப் பிரியத்துடன் கொடுத்தோர்
பிறருண்டோ காந்தியைப் போல்!

அநுபல்லவி

மறக்கொலை போரிற்சிக்கி பிரிப்பவர் எங்குமுண்டு
மற்றும் பலவழியில் மனமின்றிச் சாவதுண்டு.       (பிறர்)

சரணங்கள்

உயிரைப் பணையம்வைத்தே உண்மைக் குழைப்பதுவே
உத்தம சேவையென்று நித்தநித் தமும்சொல்லி
அயர்வின்றி மரணத்தில் அச்சத்தை இகழ்ந்தேசி
அன்பிற்கே உயிர்தரும் ஆற்றலின் புகழ்பேசி       (பிறர்)1

நமனும் நடுங்கிட்ட நவகாளி பிணக்காட்டில்
நடையாய் நடத்துகாந்தி நலிந்திட்ட குணம்காட்டும்
சமனும் உயர்வுமில்லார் சன்மாக்கம் வகுத்ததன்
சாதனைக் கேபல வேதனை சகித்ததை       (பிறர்)2

உண்ணா விரதம் கொண்ட ஒவ்வொரு தடவையும்
உயிர்தந்து உயிர்வந்த உண்மை உலகறியும்
கண்ணாரக் கண்டதெய்வம் காந்தியின் தியாகத்தில்
கட்டோடு விட்டொழிப்போம் மதவெறி மோகத்தை.       (பிறர்)3