புலவர் சிவ. கன்னியப்பன் 173

படித்தோம் படித்தோமென்று பட்டங்காட்டி - ஏழைப்
பாமரரை ஏய்த்து வாழ்ந்தவ ரெல்லாம்
நடித்த நாடகங்கள் தவரென்பதைக் - கண்டு
நல்வழி நடப்பரென்று ஆடுராட்டே!       10

அந்நியர்கள் நூல்கொடுத்தும் ஆடைகொடுத்தும் - நம்
அங்கத்தை மூடுகின்ற பங்கமொழியும்
கன்னியர்கள் நூற்கப்பல காளைகள் நெய்ய - நாம்
காத்துக் கொள்வோம் மானமென்று ஆடுராட்டே!       11

125. சுக வாழ்வு

சுதந்தரம் இல்லாமல் இருப்பேனோ? - வெறும்
சோற்றுக் குயிர்சுமந்தே இறப்பேனோ?       (சுத)1

விடுதலை யடையாமல் விடுவேனோ? - என்னை
விற்றுடல் வளர்ப்பதில் கெடுவேனோ?       (சுத)2

மானத்தைப் பெரிதென்று மதிப்பேனோ? - அன்றி
மாற்றவர்க் குழைத்துடல் நசிப்பேனோ?       (சுத)3

தொழுதுடல் சுகிப்பதைத் தொலைப்பேனோ? - இன்றித்
தொழும்பனென் றேபெயர் நிலைப்பேனோ?       (சுத)4

பயமின்றித் தருமத்திற் குழைப்பேனோ? - விட்டுப்
பாவங்க ளுக்கொதுங்கிப் பிழைப்பேனோ?       (சுத)5

ஞான சுதந்தரத்தை அடைவேனோ? - இந்த
ஊனுக்கு ழைத்தடிமை தொடர்வேனோ?       (சுத)6

126. கர்ப்பிணிகளை நடத்தும் முறை

பல்லவி

கர்ப்பிணிப் பெண்டுகளைக் கருணை யுடன்மிகவும்
கவனிக்க வேண்டுவமே.