174நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அநுபல்லவி

அற்பமென் றவர்களை அசட்டைசெய் வீரெனில்
ஆண்டவன் சாபமுண்டு

சரணங்கள்

கொஞ்சும் மொழிகள்சொல்லிக் கோதை யிளங்கொடியைக்
       குதூகலப் படுத்திவைப்பீர்
அஞ்சும் படிக்குச்செய்து அடிப்பதும் திட்டுவதும்
       ஐயையோ ஆகாது.       (கர்ப்)1

குற்றங்கள் செய்திடினும் முற்றும் மனம்பொறுத்துக்
       குணமுடன் வார்த்தைசொல்வீர்
சற்றும் அவர்மனதில் சஞ்சலம் ஒன்றுமின்றிச்
       சந்தோஷம் புரிவீர்.       (கர்ப்)2

நல்ல கதைகள்தினம் சொல்லிய வர்மனதை
       நயம்படச் செய்துவைப்பீர்.
அல்லும் பகலும்அவர் ஆண்டவ னைத்துதித்து
       அறஞ்செய வரந்தருவார்.       (கர்ப்)3

127.கொடியைப் போற்றிக் கும்பிடு

பல்லவி

கொடியைப் போற்றிக் கும்பிடு
       கொடுமை தீரும் நம்புநீ

அநுபல்லவி

அச்சம் போக்கும் கொடிஇது;
       ஆண்மை நல்கும் கொடிஇது;
இச்செகத்து வாழ்வினை
       இன்பமாக்கும் கொடிஇது.       (கொடி)

சரணங்கள்

பரத நாட்டின் கொடி இது;
       பழமையான கொடிஇது;
விரத மாகப் போற்றினால்
       விருப்பம் யாவும் சித்தியாம்       (கொடி)1