சத்தியத்தின் கொடிஇது; சக்தி தந்த கொடிஇது; புத்தி மிக்க ஞானிகள் பூஜைசெய்த கொடிஇது; (கொடி)2 மரணமென்ற எண்ணமே மனத்தி லின்றிச் செய்திடும் திரண மாக எதையுமே தியாகம் செய்யத் தந்திடும.் (கொடி)3 கட்டு விட்ட மக்களை அன்பு கொண்டு கட்டியே ஒற்று மைப்ப டுத்தவே உறுதியான கொடிஇது. (கொடி)4 ஜாதி பேதத் தீமையைச் சாம்ப லாக்கும் கொடிஇது; நீதி யான எதையுமே நின்று காக்கும் கொடிஇது. (கொடி)5 ஊழி தோறும் புதியதாம் உறுதி கொண்ட கொடிஇது; வாழி வாழி நம்கொடி! வாழ்க வாழ்க நாடெல்லாம்! (கொடி)6 128. வைஷ்ணவன் என்போன் யார்? பல்லவி வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின் வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்) சரணங்கள் பிறருடைத் துன்பம் தமதென எண்ணும் பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்; உறுதுயர் தீர்த்தத்தில் கர்வங் கொள்ளான் உண்மை வைஷ்ணவன் அவனாகும்; |