176நாமக்கல் கவிஞர் பாடல்கள்

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
       வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
       அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.       (வைஷ்)1

விரும்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
       விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
       உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோ தும்அவன்
       ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன்எவனோ
       அவனே உண்மை வைஷ்ணவனாம்.       (வைஷ்)2

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
       மனத்தினில் திடமுள வைராக்கியன்
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
       நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
       பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
       ஆகும்அவனே வைஷ்ணவனாம்.       (வைஷ்)3

கபடமும் கோபமும் இல்லாதவனாய்க்
       காமக் குரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
       தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடை வார்கள் எழுபத் தோராம்
       தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
       அலைகடல் நீந்திக் கரைச் சேர்வார்.       (வைஷ்)4

குறிப்பு:-நாயகன் - தலைவன்; உறுதுயர் - மிக்க துன்பம்.