பட்சிகளின் சிறுகுஞ்சுச் சிறகில் லாமல் பறக்கவெண்ணிக் கூட்டைவிட்டுப் பாய்வ தேபோல் சிட்சை பெற்றுக் கல்விநலம் சேர்வதற்குள் சிறுவயதில் மாணவர்கள் சிந்திக் காமல் கட்சிகட்டும் அரசியலின் விவகாரத்தில் கலந்துகொள்ளக் கூடாது; கண்டிப்பாகப் பட்சமுடன் அதைத்தடுக்கும் ஆசான் மாரைப் பரிகசிப்போர் சிறகில்லாப் பறவைக் குஞ்சே. 3 குருபக்தி இல்லாத காரணத்தால் குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம் தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித் தமக்கேதோ உரிமையெனத் தருக்கிக் கொண்டு கருமத்தைக் கல்விதனைக் கருதி டாமல் கடமைமறந் துரிமைபுகல் கட்சிகட்டும் சிறுபுத்தி மாணவரைச் சேர்த்து விட்டால் சீரழியும் பள்ளிகளின் சிறந்த சேவை. 4 ஓதலினும் மிகச்சிறந்த(து) ஒழுக்கம்என்ற உண்மைதனை மாணவர்கள் உணர வேண்டும். மேதினியில் சிறப்படைந்த மேலோ ரெல்லாம் மேன்மையுற்ற காரணம் நல்லொழுக்க மேதான் வேதனைகள் வந்தாலும் விலகிப் போகும் வெற்றிகளும் நல்லொழுக்கம் விரவி னோர்க்கே; ஆதலினால் மாணவர்நல் லொழுக்கம் தன்னை ஆருயிர்போல் கருதிஅதைக் காக்க வேண்டும். 5 பெற்றோர்கள் மிகப்பெரிதும் வறியரேனும் பெற்றமகன் கல்விகற்றால் போதும் என்ற வற்றாத ஆசையினால் வாடித் தேடி வயிறார உண்ணாதும் வருந்திச் சேர்த்துப் |