பற்றோடும் அனுப்புகின்ற பணத்தை யெல்லாம் பட்டணத்துப் பகட்டுகளில் பாழாக் காமல் சிற்றாசை களிற்களித்துச் சீர்கெடாமல் சிந்தனையைக் கல்விக்கே செலுத்த வேண்டும். 6138. மோட்டார் ஓட்டிகளுக்கு மோட்டார் ஓட்டுகிற அண்ணா! - கொஞ்சம் மெள்ள ஓட்டினால் என்ன? கேட்டால் வருத்தமேன் இதிலே? - வந்தால் கெடுதி உனக்குத்தான் முதலே. 1 அகத்தியம் நேர்ந்துவிட்டாலும் - வேகம் அடக்கி ஓட்டலே சீலம். மிகத்திறம் வாய்ந்துள பேரும் - வேக மிடுக்கில் அசந்துவிட நேரும். 2 ‘டயர்கள்‘ சரியில்லை யென்றால் - வழியில் துயரம் பெரிதாகும் சென்றால், டயர்கள் மிகப்புதிய வேனும் - ஸ்டெப்னி தனியே கையோடு வேணும். 3 போதை ஊட்டுகிற எதையும் உண்டால் போகும் வழியறிவு சிதையும்; காதைக் கண்ணைமிக அடைக்கும் - காரைக் கவிழ்த்து மண்டைகளை உடைக்கும். 4 காரை ஓட்டுகிறபோது - கவனம் வேறு எதிலும்செலல் தீது. ஊரை நெருங்கிவிட்ட உடனே - தெருவின் ஓரம் பார்த்துச்செலல் கடனே. 5 காரில் பலவிதங்கள் அவற்றுள் - இரவில் ‘லாரி‘ ஓட்டுபவர் தவற்றை நேரிற் கண்டபடிதம்பி! நான் கூறு கின்றேன்மனம் வெம்பி. 6 |