192நாமக்கல் கவிஞர் பாடல்கள்

இரவில் ஓட்டுகிற வழக்கம் - அதுதான்
       விரவும் ‘லாரிகளின்‘ பழக்கம்
உரிய பொறுப்புணர்ச்சி இல்லை - அதனால்
       உயிரை இழந்தவர்கள் கொள்ளை.       7

‘லாரி‘ ஓட்டிவரும் நண்பா - வெளிச்சம்
       மாறக் காட்டுவதில் வம்பா?
நேரில் நெருங்கிவிழி கூசும் - விளக்கை
       நிறுத்தி உதவாமை மோசம்.       8

பின்னால் வந்த ‘பிளஷர்‘ மோட்டார்-அது
       முன்னால் போகவழி கேட்டே
என்ன சத்தம்போட் டாலும் - ‘லாரி‘
       ஏதும் கேளாது போலும்.       9

வேடிக்கை காட்டுவதும் உண்டு - லாரி
       விலகி வழிவிட்ட தென்றே
ஓடிக் கடக்க எண்ணும் நேரம் - மீண்டும்
       உடனே வழிமறைக்கும் லாரி.       10

மோட்டார் விபத்துகளின் கணக்கில் - லாரி
       ஓட்டும் தவறுகளே கனக்கும்.
வீட்டை இடித்தகதை சிலவும் - லாரி
       ஓட்டி நிகழ்ந்ததென நிலவும்.       11

லாரி ஓட்டுகிற ஐயா - நான்
       கூறும் இக்குறைகள் பொய்யா?
கோரிக் கேட்டுக்கொள் கின்றேன் - இந்தக்
       குறைகள் நீக்கிவிடில் நன்றாம்.       12

139. காவலர்களுக்கு

பயிரை காக்கும் வேலி போற்கண்
       பார்வைகாக்கும் இமைகள்போல்
வெயிலை நீக்கக் குடையும் தண்ணீர்
       வேட்கை தீர்க்க அமைவபோல்