புலவர் சிவ. கன்னியப்பன் 193

உயிரைக் காக்க உடைமை காக்க
       ஊரைக் காக்கும் போலீசின்
பெயரைக் காக்கும் அறிவைக் பேசப்
       பெரிதும் அதன் மேலாசை.       1

துஷ்டர் யாரும் நடுந டுங்கித்
       துடுக்கு விட்டு வாழவும்
இஷ்டம் போல மற்ற மக்கள்
       இனிய வாழ்க்கை சூழவும்
கஷ்ட மான கடமை செய்யும்
       காவ லாளர் வாயினால்
அட்டி யின்றிப் பயமு றுத்தல்
       அவசி யந்தான் ஆயினும்,       2

குற்ற வாளி யைப்பி டிக்கக்
       கோரித் தேடும் காவலர்
குற்ற முள்ள பேரைக் கூடக்
       கொடுமை செய்தல் கேவலம்.
முற்று மிந்தத் தீமை தன்னை
       விட்டொ ழிக்க முடியுமேல்
வெற்றி யோடு போலீ சாரை
       வேண கீர்த்தி அடையுமே.       3

உதைகொ டுத்தும் அடிய டித்தும்
       உள்ளே தள்ளிப் பூட்டியும்
வதைபு ரிந்தே ஒப்புக் கொள்ளும்
       வாக்கு மூலம் கேட்டிடும்
கதைகள் நித்தம் காவ லாளர்
       கண்ணி யத்தைத் தேய்க்குமே.
இதையு ணர்ந்து கடமை பூண்டு
       இம்சை செய்தல் நீக்குவீர்.       4

7 நா.க.பா.பூ.வெ. எ. 489