194நாமக்கல் கவிஞர் பாடல்கள்

எந்த நாட்டில் போலீஸ் வேலை
       இழுக்கி லாமல் வதியுமோ
அந்த நாட்டில் குற்ற மற்ற
       அமைதி யின்பம் அதிகமாம்;
இந்த நாட்டின் காவல் வேலை
       இசைப டைத்த துண்மையே.
நிந்தை யுண்டு சிலவி டத்தில்
       நீக்கி விட்டால் நன்மையே;       5

140. ஆசானுக்கு

தாயென அன்பு செய்து
       தந்தைபோற் பரிந்து சொந்தச்
சேயென அணைத்துப் பேசிச்
       செவ்விய அறிவு கூறித்
தூயநன் னடத்தை கற்கத்
       துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமு ளோனே
       "ஆசான்" என் றழைக்கத் தக்கோன்.       1

தப்பிதம் கண்ட போதும்
       தண்டிக்க முனைந்தி டாமல்
நட்புடைத் தோழன் போல
       நயமாக எடுத்துக் காட்டி
ஒப்புற வாகப் பேசி
       உள்ளத்தை உருக்க வல்ல
அப்பெருந் தகைமை யேநல்
       லாசானுக் கமைய வேண்டும்.       2

மாணவன் நினைக்குந் தோறும்
       மகிழ்தரும் வடிவ மாகக்
காணுறும் போதே நெஞ்சக்
       கசடறு காட்சி யாகி